பூங்காக்கள், அரண்மனைகள், அருங்காட்சியகம், ஹுசைன் சாகர் போன்றவற்றை ஹைதராபாத்தில் 12 மணி நேரத்தில் பார்க்கலாம். ஹைதராபாத்தில் உள்ள சுற்றுலா தலங்களை ஒரே நாளில் பார்க்க விரும்புவோருக்கு இந்த டூர் பேக்கேஜ் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
மாலை 4 மணி முதல் 5 மணி வரை துர்கம் செருவு பூங்காவை காணலாம். கேபிள் பிரிட்ஜில் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை உலா வரலாம். மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை என்டிஆர் பூங்கா மற்றும் ஹுசைன் சாகர் ஆகிய இடங்களுக்குச் செல்லலாம். இரவு 8 மணிக்கு செகந்திராபாத்தில் உள்ள ஆல்பா ஹோட்டலை வந்தடைவதோடு சுற்றுப்பயணம் முடிவடைகிறது.