குழுவாக பயணிக்கும் நபர்கள் பேசுவது, சத்தமாக பாட்டு போடுவது, சீட் பிரச்சனை என்று எல்லாம் வந்து ஒரு அழகான இரவு நேர பயண தூக்கத்தை கெடுத்துவிடும். ஆனால் இதை கட்டுப்படுத்த IRCTC சில விதிமுறைகளை பயணிகளுக்கு விடுத்துள்ளது. இதை தெரிந்து கொள்ளுங்கள். வேறு பயணிகள் தொந்தரவு செய்தல் அந்த விதிமுறைகள் பயன்படும்.
இரவு 10 மணிக்குப் பிறகு, TTE (பயண டிக்கெட் பரிசோதகர்) பயணிகளின் டிக்கெட்டை ஆய்வு செய்ய முடியாது. ஸ்டேஷனில் பயணிகள் ஏறும்போது மட்டும் அவர்களது சீட்டுகளை சரிபார்க்கலாம். அதுவும் மற்ற பயணிகளை தொந்தரவு செய்யாத வண்ணம் இருக்கும். மேலும், கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் இதர ரயில்வே பணியாளர்களும் இந்த விதி பொருந்தும்.