இவற்றில் முக்கியமானது தங்குமிடம். எங்கே ஊரை சுற்றினாலும் திரும்ப வந்து ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெற சிறப்பான தங்குமிடங்களை தேடுவோம். அப்படியானவர்களுக்கு உதவும் வகையில் லண்டனை தலைமையிடமாக கொண்ட காண்டே நாஸ்ட் டிராவலர் இதழ் (Condé Nast Traveller Magazine) சிறந்த ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்கள் கொண்ட கோல்டன் லிஸ்ட் 2023 ஐ வெளியிட்டுள்ளது. அதன் சிறந்த 5 இடங்களை பார்ப்போம்.
தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டல் , மும்பை, இந்தியா (ஆசியா)
நீங்கள் இந்தியாவின் பிரமாண்ட ஹோட்டல் வசதிகளை அனுபவிக்க விரும்பினால் மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ்ஸுக்குச் செல்லுங்கள். பரந்த அரபிக்கடலை எதிர்கொள்ளும் இந்த ஹோட்டல் உண்மையிலேயே ராயல்டியின் பிரதிநிதித்துவம். இது முதலில் இந்திய கட்டிடக் கலைஞர்களான ராவ்சாஹேப் வைத்யா மற்றும் டிஎன் மிர்சா ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு 1898 இல் நிறுவப்பட்டது. விக்டோரியன் கோதிக் மற்றும் ரோமானஸ்க் விவரங்களுடன் இந்தோ-சராசெனிக் வளைவுகளுடன், அமைக்கப்பட்டிருக்கும்
ஜுமேரா அல் கஸ்ர்(Jumeirah Al Qasr) - துபாய் (மத்திய கிழக்கு)
அடுத்ததாக இருப்பது துபாயின் சன்னி கடற்கரைகளில் ஓய்வெடுக்க ஏற்ற ஜுமேரா அல் கஸ்ர். இந்த ஹோட்டலில் தனித்துவமான அரேபிய ராயல்டியை அனுபவிக்க முடியும். அது மட்டும் இல்லாமல் ஹோட்டல் கால்வாய்-பாணி நீர்வழிகளுடன் கூடிய விரிவான நிலப்பரப்பை வழங்குகிறது. ஹோட்டல் அறையிலிருந்து அரேபிய வளைகுடாவின் அற்புதமான காட்சியை காணலாம்.
லேக் ஹாவியா ஸ்டேஷன் (Lake Hāwea Station ) - நியூசிலாந்து
லேக் ஹவா ஸ்டேஷன் என்பது ஒரு பக்கம் விவசாயம் மறுபக்கம் அதிநவீன வசதிகளுடன் கூடிய விடுதி என்று செயல்படும் இடமாகும். கிவியின் விவசாயப் பொருளாதார நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதோடு ஆடம்பரத்தையும் வழங்குகிறது. இது நியூசிலாந்தின் முதல் 'பூஜ்ஜிய கார்பன் இடம்' என்று சான்றளிக்கப்பட்ட பண்ணையாகும். இந்த உயர்தர ஆடம்பரமான தங்குமிடம் கம்பீரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது.
ஹோட்டல் டி க்ரில்லன்(Hôtel de Crillon,), ரோஸ்வுட் ஹோட்டல் - பாரிஸ் (ஐரோப்பா) Le Crillon அல்லது Hôtel de Crillon என்பது காதலர்களின் நகரமான பாரிஸின் அனைத்து நேர்த்தி மற்றும் நுட்பங்களின் சரியான உருவகமாகும். ப்ளேஸ் டி லா கான்கோர்டை நோக்கி இருக்கும் இந்த ஹோட்டல் பாரிஸின் காலத்தால் அழியாத அழகு மற்றும் அதன் பிரெஞ்சு கலையின் அழகுகளை பெற்றுள்ளது. உன்னதமான சமையல் அனுபவம் முதல் ஹோட்டலின் புத்துணர்ச்சியூட்டும் ஸ்பா வரை, எல்லாமே சிறந்த அனுபவங்கள் தான்.
மாலிபு பீச் இன் - கலிபோர்னியா, அமெரிக்கா
கலிபோர்னியாவின் சுவையை நீங்கள் அனுபவிக்க , அதன் கடல் பனோரமாகாட்சிகள், பசிபிக் பெருங்கடல் கரையோர சூரிய அஸ்தமனம் , அமைதியான தனிப்பட்ட கடற்கரையில் ஓய்வெடுக்க, நடைபோட, சில புத்துணர்ச்சியூட்டும் பானங்களை பருக என்ற எல்லா சூழல்களும் நிறைந்தது தான் மாலிபு பீச் இன்(Malibu Beach Inn)ரிசார்ட்.