புதிய வகை கொரோனா பரவும் நேரத்தில் விமானப் பயணமா? உங்களுக்கான சில டிப்ஸ்..
கொரோனா வைரஸ் தொற்றுநோயை பல நாடுகளுக்கு பரப்புவதற்கு வான் மற்றும் கடல் வழி போக்குவரத்து மிகவும் சாதகமான சூழலை கொண்டுள்ளதால் பல்வேறு நாடுகள் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Web Desk | December 28, 2020, 5:20 PM IST
1/ 8
தொற்றுநோயின் அதிக ஆபத்து காரணமாக, அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களின் பயணத்திற்கு, குறிப்பாக விமான வழி பயணத்திற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுநோயை பல நாடுகளுக்கு பரப்ப வான் மற்றும் கடல் வழி போக்குவரத்து மிகவும் சாதகமான சூழலை கொண்டுள்ளதால் பல்வேறு நாடுகள் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
2/ 8
இருப்பினும், மோசமான தொற்று காலத்தைத் தொடர்ந்து ஊரடங்குகள் தளர்த்தப்பட்ட அல்லது நீக்கப்பட்டவுடன், சர்வதேச மற்றும் தேசிய விமானப் பயண வரம்புகளுடன் பல நாடுகளில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது. அலுவலக மற்றும் பர்சனல் வேலை காரணமாக பலர் விமானத்தில் தவறாமல் பயணிக்க வேண்டியிருக்கிறது. எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் பாதுகாப்பான விமான அனுபவத்தைப் பெற முடியும். அதற்கு பின்வரும் டிப்ஸ்கள் பேருதவியாக இருக்கும்.
3/ 8
மாஸ்க்குகள் (Face Masks) : கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பில் முதல் வரிசையில் இருப்பது மாஸ்க்குகள் (Face Masks). ஒருவர் விமானத்தில் பயணிக்கும்போதும், நாட்டிற்குள்ளோ அல்லது அதற்கு வெளியே செல்லும்போதும் மாஸ்க்கை நாம் கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும். மாஸ்க்குகளை அணிந்து நாம் இருமும் போதும் தும்மும் போதும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பை அது குறைகிறது.
4/ 8
சோப்புகள் மற்றும் சானிடைசர்கள் (Soaps and Sanitisers) : பொருட்களின் பரப்புகளில் வைரஸ் உயிர்வாழும் என அறியப்படுவதால், விமான நிலையத்தில், பலருக்கும் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உலக சுகாதார அமைப்பு (World Health Organisation (WHO)) 40 முதல் 60 வினாடிகள் சோப்புகளால் கைகளை கழுவ பரிந்துரைக்கிறது. சோப்பின் மூலக்கூறுகள் வைரஸின் வெளிப்புற அடுக்கை பாதித்து அதை அழிக்கிறது. ரசாயனங்களைப் போலல்லாமல் சோப்புகள் நம் சருமத்துக்கோ அல்லது நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கோ தீங்கு விளைவிப்பதில்லை.
5/ 8
கொரோனா வைரஸை அகற்றுவதில் குறைந்தது 60 சதவீத ஆல்கஹால் கொண்ட ஹான்ட் சானிடைசர்கள் பயனுள்ளதாக இருக்கும். சானிடைசர், கொரோனா வைரஸை கொல்லும் என்றாலும், சருமத்தில் வியர்வை அல்லது ஈரம் இருந்தால், அது சனிடைசரை நீர்த்து போக செய்வதால், அது திறன்பட செயல்படமால் போகும் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஹான்ட் சானிடைசர்களில் உள்ள மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு நமக்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது நமது இயற்கையான தோல் எண்ணெய்களை அகற்றி, நன்மை பயக்கும் பாக்டீரியாக்களைக் கொன்று, நமது சருமம் வறண்டு, சருமத்தில் விரிசலை ஏற்படுத்துகிறது. ஒருவர் கைகளை கழுவ முடியாதபோது மட்டுமே சானிடைசர்களைப் பயன்படுத்த வேண்டும்.
6/ 8
விமான நிலைய சமூக இடைவெளி (Airport social distancing): விமான நிலையங்கள் நெரிசலான இடம் என்பதால், மற்ற பயணிகளுடன் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஒன்றாக பயணம் செய்வதைத் தவிர, ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பு கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
7/ 8
டிஜிட்டல் பேமண்டுகள் (Digital payments) : இருமல், தும்மல் மற்றும் மாஸ்க் இல்லாமல் பேசும்போது வெளிவரும் நீர்த்துளிகள் வழியாக வைரஸ் பரவுவதால் நேரடி பண பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. எனவே டிஜிட்டல் பேமண்டுகள் (Digital payments) பாதுகாப்பானவை ஆகும்.
8/ 8
விமானத்தில் காற்றோட்டமான இடம் மற்றும் இருக்கை (In-flight air circulation and seating) : விமானத்தில் பயணம் செய்யும் போது ஒரு விமான அறைக்குள் காற்று தொடர்ந்து புத்துணர்ச்சி பெறுவதால் பயணிகள் பெருமூச்சு விடலாம். பெரும்பாலான நவீன விமானங்களில் உயர்தர காற்று வடிப்பான்கள் (high-quality air filters) பொருத்தப்பட்டுள்ளன, அவை பயணிகளுக்கு இடையே வைரஸ்கள் பரவுவதற்கான வாய்ப்பை குறைக்கின்றன. இதற்கு ஜன்னல் இருக்கைகள் மிகவும் பாதுகாப்பான தேர்வாகும், ஏனெனில் இது பயணிகளை மற்ற பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் (passengers and flight crew) அடிக்கடி பயன்படுத்தும் நடுவழியிலிருந்து உங்களை விலக்கி வைக்கிறது.