முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » summer vacation 2023 : கோடை விடுமுறையில் அதிகம் பார்த்திராத இந்த 5 இடங்களுக்கு போய் வாருங்கள்!

summer vacation 2023 : கோடை விடுமுறையில் அதிகம் பார்த்திராத இந்த 5 இடங்களுக்கு போய் வாருங்கள்!

அழகோடு அமைதி உணர்வையும் தக்கவைக்கும் சில தனித்துவமான இடங்கள் நிம்மதியான பயண அனுபவத்தை அளிக்கும்.

  • 16

    summer vacation 2023 : கோடை விடுமுறையில் அதிகம் பார்த்திராத இந்த 5 இடங்களுக்கு போய் வாருங்கள்!

    அதிகப்படியான வணிகமயமாக்கப்படாத மற்றும் மக்கள் நிறைந்த ஒரு இடத்திற்கு சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்கும் இருக்கும். அழகோடு அமைதி உணர்வையும் தக்கவைக்கும் சில தனித்துவமான இடங்கள் நிம்மதியான பயண அனுபவத்தை அளிக்கும். நீங்கள் குறைவான பாதையில் பயணிக்க விரும்பினால், இந்த ஐந்து இடங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

    MORE
    GALLERIES

  • 26

    summer vacation 2023 : கோடை விடுமுறையில் அதிகம் பார்த்திராத இந்த 5 இடங்களுக்கு போய் வாருங்கள்!

    பொன்முடி, கேரளா : திருவனந்தபுரத்தில் இருந்து மூன்று மணி நேர பயணத்தில் அடையக்கூடிய பொன்முடி மலைகள் மூடுபனியால் மூடப்பட்டிருக்கும். மேலும் அனைத்து வகையான தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாக இது உள்ளது. இந்த பகுதியில்  மலைகளின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. அமைதியான கிராமங்கள் முதல் பரந்த தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள் என இந்த இடம் அனைத்தையும் கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    summer vacation 2023 : கோடை விடுமுறையில் அதிகம் பார்த்திராத இந்த 5 இடங்களுக்கு போய் வாருங்கள்!

    ஹெமிஸ் கிராமம், லே : லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதி, சென்றடைவது அவ்வளவு எளிதல்ல என்பதன் அடிப்படையில், இங்கு நிறைய தனிமைப்படுத்தப்பட்ட, அதிகம் ஆராயப்படாத பல இடங்கல் இருப்பதாய் உணர முடியும். இங்குள்ள ஹெமிஸ் கிராமம் அத்தகைய இடமாகும். இந்த கிராமத்தின் பின்னணியில் உள்ள பசுமையான நிலப்பரப்பு, ஹெமிஸ் மடாலயத்தின் அமைதி சூழ்நிலை, ஹெமிஸ் திருவிழாவின் உற்சாகத்தையும் நிச்சயமாக தவறவிட கூடாது.

    MORE
    GALLERIES

  • 46

    summer vacation 2023 : கோடை விடுமுறையில் அதிகம் பார்த்திராத இந்த 5 இடங்களுக்கு போய் வாருங்கள்!

    டூபெமா, நாகாலாந்து : நாகலாந்து மாநிலத் தலைநகர் கோஹிமாவிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள டூபெமா(Tuophema)கிராமம், நாகாலாந்தின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைக் காட்டுகிறது. அதன் வழக்கத்திற்கு மாறான வாழ்க்கை முறையை பார்த்துக்கொண்டே, காட்டுப் பூக்கள் மற்றும் செர்ரி மலர் பூத்து குலுங்கும் பாதைகள் வழியாக உலாவலாம். வசதியான பாரம்பரிய குடிசைகளில் தங்கலாம். மலை உச்சியில் இருந்து பிரமிக்க வைக்கும் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

    MORE
    GALLERIES

  • 56

    summer vacation 2023 : கோடை விடுமுறையில் அதிகம் பார்த்திராத இந்த 5 இடங்களுக்கு போய் வாருங்கள்!

    ஷெகாவதி, ராஜஸ்தான் : ராஜஸ்தானில் உள்ள சிகார், ஜுன்ஜுனு(Jhunjhunu) மற்றும் சுருவை(churu) உள்ளடக்கிய பகுதியான ஷெகாவதி(Shekhawati), பார்வையாளர்களின் கற்பனையை நிச்சயம் கவரும் வகையில் அழகான ஹவேலிகளைக்(மாளிகைகளை) கொண்டுள்ளது. பழமையான மாளிகைகள் இப்பகுதியின் வளமான வரலாற்றின் சான்றாகும். ஷேகாவதி கலை மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கு ஒரு புகலிடமாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    summer vacation 2023 : கோடை விடுமுறையில் அதிகம் பார்த்திராத இந்த 5 இடங்களுக்கு போய் வாருங்கள்!

    சத்பால், காஷ்மீர் : காஷ்மீரில் உள்ள அமைதியான இடமான சட்பால்(Chatpal), அதிக சுற்றுலாப் பகுதிகளின் சலசலப்பில் இருந்து தப்பிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்கிறது. இது கண்ணுக்கினிய பைன் காடுகளால் சூழப்பட்டுள்ளது மற்றும் கம்பீரமான இமயமலை பின்னணியைக் கொண்டுள்ளது. இயற்கை அழகு மற்றும் அமைதியான வாழ்க்கை முறையின் கலவையானது சத்பலை அமைதியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தப்பிக்க விரும்புவோருக்கு சிறந்த இடமாக அமைகிறது.

    MORE
    GALLERIES