நாட்டில், வட மாநிலங்கள் மற்றும் வடமேற்கு பகுதிகளை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பனிப்பொழிவின் அளவு ரொம்பவே குறைவுதான். அதிகபட்சம் போனால் சாலைகளில் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மூடுபனி ஒன்றிரண்டு நாட்களுக்கு இருக்கும். அதற்கே நம் மக்கள் பூரித்துப் போய், “எங்கள் ஊர் கொடைக்கானலை போல உள்ளது, ஊட்டியில் இருக்கும் உணர்வு ஏற்படுகிறது’’ என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் சிலாகித்து பேசி வந்தனர்.
ஆனால், உண்மையாகவே மலைப்பிரதேசங்களை விடவும் கடுமையான பனிப்பொழிவையும், நம்மை நடு, நடுங்கச் செய்திடும் கடுமையான குளிரையும் பார்த்துள்ளீர்களா? அதிலும், இத்தகைய இடங்களை தேடிச் சென்று, வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களை பெற வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கான தகவல் இந்தச் செய்தியில் இருக்கிறது.
நாட்டில், வட மாநிலங்கள் மற்றும் வடமேற்கு பகுதிகளை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பனிப்பொழிவின் அளவு ரொம்பவே குறைவுதான். அதிகபட்சம் போனால் சாலைகளில் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மூடுபனி ஒன்றிரண்டு நாட்களுக்கு இருக்கும். அதற்கே நம் மக்கள் பூரித்துப் போய், “எங்கள் ஊர் கொடைக்கானலை போல உள்ளது, ஊட்டியில் இருக்கும் உணர்வு ஏற்படுகிறது’’ என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் சிலாகித்து பேசி வந்தனர்.
நாட்டில், வட மாநிலங்கள் மற்றும் வடமேற்கு பகுதிகளை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பனிப்பொழிவின் அளவு ரொம்பவே குறைவுதான். அதிகபட்சம் போனால் சாலைகளில் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மூடுபனி ஒன்றிரண்டு நாட்களுக்கு இருக்கும். அதற்கே நம் மக்கள் பூரித்துப் போய், “எங்கள் ஊர் கொடைக்கானலை போல உள்ளது, ஊட்டியில் இருக்கும் உணர்வு ஏற்படுகிறது’’ என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் சிலாகித்து பேசி வந்தனர்.
பொதுவாக பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், இனி வரும் நாட்களில் பனிப்பொழிவு மென்மேலும் அதிகரிக்க உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட், ராஜஸ்தானின் மேற்குப் பகுதி போன்ற இடங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு பனிப்பொழிவு கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் இப்போதே வெப்பநிலை ஒற்றை இலக்கத்தை தொட்டுள்ளது. அதுபோன்ற இடங்களுக்கு நீங்கள் சுற்றுலா சென்று, இயற்கையை குதூகலமாக அனுபவித்து மகிழலாம்.
ஹிசார், ஹரியானா மற்றும் சஃப்தார்ஜங், டெல்லி : ஹரியானா மாநிலம், ஹிசார் பகுதியில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், டெல்லியின் சஃப்தார்ஜங் பகுதியில் இதே அளவிலும் குளிர்நிலை பதிவாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தின் ரேவரி, அம்பாலா, குருஷேத்ரா, சிர்சா போன்ற இடங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.