என்றாலே எப்போதும் பரபரப்பான மாநகரம் என்பதில் சந்தேகமில்லை. அழகியல் நிறைந்த இந்த நகரத்தை பலரும் வணிகம் சார்ந்தே அனுகுவர். சென்னைக்கு புதிதாக வருவோரும் தொழில் சார்ந்து அல்லது கல்வி சார்ந்து மட்டுமே வரக்கூடும். ஆனால் இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இரசனையுடன் இந்த சென்னையை பார்த்தால் அதன் அழகியலை உணர முடியும். பரபரப்பான சூழலுக்குள் இருக்கும் அமைதியை உணர முடியும். இங்கும் உங்கள் மன நிம்மதிக்கான இடங்கள் உள்ளன என்பது தெரியுமா..? சென்னையில் நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டிய , சுற்றிப்பார்க்க தவறிய இடங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
மெரினா கடற்கரை : மெரினா கடற்கரை சென்னையின் மிக அழகான மற்றும் மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றாகும். சென்னைக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் மற்றும் உலகின் மிக நீளமான கடற்கரைகளிலும் ஒன்றாக திகழ்கிறது. இந்த அழகான இடத்தை காண காலையிலோ மாலையிலோ செல்லலாம். கடற்கரையிலிருந்து சூரியன் உதிக்கும் அல்லது மறையும் காட்சி சிறப்பாக இருக்கும். கட்டாயம் நீங்கள் அதை தவறவிடக்கூடாது. கண்களுக்கு குளுர்ச்சியான காட்சிகள் மட்டுமன்றி அதன் நினைவாக கடற்கரையோரக் கடைகளில், பீஸ்ட் நகைகள் மற்றும் சங்கில் செய்த அழகுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம். மகிழ்ந்து உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் வந்து செல்ல சிறந்த இடம் இது.
கபாலீஸ்வரர் கோவில் : போர்ச்சுகீசிய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டு விஜயநகரப் பேரரசின் போது மீட்கப்பட்ட சிவபெருமானின் புனித சன்னதியான கபாலீஸ்வரர் கோயிலை பெரிய பல்லவர்கள் கட்டினார்கள். கபாலீஸ்வரர் கோவில் திராவிட மற்றும் விஜயநகர கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணம். இது மிகவும் அழகாக சிற்பக் கலைகளால் பிரதிப்பெற்ற பழம் பெறும் கோவிலாகும். கலைகளின் மீது ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் சிவ பெருமானின் பக்தர்களுக்கு நிறைவான ஆனந்ததை தரக்கூடிய இந்த கோவிலுக்கு கட்டாயம் சென்று வாருங்கள்.
வள்ளுவர் கோட்டம் : இலக்கியத்தை ரசிப்பவர்களுக்கு திருவள்ளுவரை தெரியாமல் இருக்க முடியாது. உலக அறிந்த கவிஞராக திகழும் திருவள்ளுவரின் நினைவாகக் கட்டப்பட்ட தேர்தான் வள்ளுவர் கோட்டத்தின் சிறப்பு. பிரம்மாண்ட கலைப் படைப்பின் ஆதாரமாக விளங்கும் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். உங்களின் கண்களை விரிவாக்கும் ஆச்சரியமிக்க கலை நுணுக்கங்களை இதில் காணலாம். வள்ளுவர் கோட்டத்தின் அழகு அதிகாலையில் அல்லது சூரியன் மறையும் போது இன்னும் சிறப்பாக இருக்கும்.
அஷ்டலக்ஷ்மி கோவில் : செல்வம் மற்றும் அறிவின் தெய்வமான லக்ஷ்மியின் இருப்பிடமாக கருதப்படும் அஷ்டலட்சுமி கோயில் பெசன்ட் கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. லட்சுமி தேவியின் எட்டு அவதாரங்களை வழிபடும் வகையில் கட்டப்பட்ட இந்த கோவிலின் தெய்வீக சூழல் உங்களை நிம்மதியாக உணர வைக்கும். கடல் அலைகள் கோயில் வளாகம் முழுவதும் எதிரொலித்து, அமைதியைக் கூட்டுகின்றன. ஆன்மீக ரீதியில் மன அமைதி தேடும் உங்களுக்கு இது சிறந்த இடமாக இருக்கும். உங்கள் கவலைகளை மறக்கவும் சிறந்த இடம்.
ஆயிரம் விளக்கு மசூதி : சென்னையின் ராயப்பேட்டை பகுதி அதன் பல குவிமாடங்கள் கொண்ட மசூதியால் ஒளிர்கிறது என்றால் ஆச்சரியமில்லை. இது முஸ்லிம்களின் வழிபாட்டுத் தல இடமாகவும் உள்ளது. கடந்த காலத்தில் மசூதியின் மண்டபத்தை அலங்கரிக்க 1000 விளக்குகள் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால்தான் இது ஆயிரம் விளக்கு மசூதி என்று அழைக்கப்படுகிறது. இந்த மசூதி இடைக்கால கட்டிடக்கலை பாணியின் சிறப்பை நிரூபிக்கும் விதமாக அமைந்திருக்கும். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு மினாரட்டுகள் சுமார் 64 அடி உயரத்தில் உயர்ந்து அதை மேலும் அழகாக்குகிறது. இந்த இடத்தையும் நீங்கள் காண வேண்டும். இந்த இடம் மசூதி மட்டுமன்றி அவர்களுடைய கலாச்சாரம், உணவுப்பழக்கத்தையும் காண முடியும். உணர முடியும். பல உணவு வகைகளை சுவைப்போருக்கும் இந்த உணவு சுவை விருந்தாக அமையும்.