கர்நாடக கரையில் உள்ள உடுப்பிக்கு பல முகங்கள் இருக்கிறது. அழகிய வெண்மணல் கடற்கரை, பாராசைலிங், உடுப்பி உணவு, கடலோர பயணம், என்று அடுக்கிக்கொண்டே போகலாம். எல்லாவற்றையும் பொறுமையாக அனுபவித்து முடிக்க 1 வாரம் கூட பத்தாது. கோசம்பரி , கோடதேக்லு , அவலகி உபகாரி மற்றும் ஹாலிக்ஸ் இதெல்லாம் மிஸ் பண்ணாம சுவைத்து பாருங்க.
நம் அருகே உள்ள இடத்தின் பெரும்பாலும் நமக்கு தெரிவதில்லை. வால்பாறையை போல ஒரு சொர்க்கம் கிடைப்பது அரிது. 40 ஹேர்பின் பெண்டுகள் கடந்து போகும் போது அங்கே அழகிய காடுகள் கீச்சிடும் பறவைகளும் நம்மை கைபிடித்து பூமியின் சொர்க்கத்திற்கே அழைத்துச்செல்லும். மேற்கு தொடர்ச்சி மலையின் அழகான பறவைகளை இங்கே அதிகம் காணலாம்