முகப்பு » புகைப்பட செய்தி » 1000 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை கொண்ட ஐந்து நாடுகள் எவை தெரியுமா..?

1000 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை கொண்ட ஐந்து நாடுகள் எவை தெரியுமா..?

நம் இந்திய நாட்டில் மொத்தம் 486 விமான நிலையங்கள் மட்டுமே உள்ளன. 1000 விமான நிலையங்களில் பாதியை கூட நாம் இன்னும் எட்டவில்லை.

  • 17

    1000 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை கொண்ட ஐந்து நாடுகள் எவை தெரியுமா..?

    உலகம் முழுவதும் பல அழகான விமான நிலையங்கள் உள்ளன. ஓரு நாட்டின் நுழைவு வாயிலாக விமான நிலையங்கள் தான் அதிகம் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் முக்கிய நகரங்களிலும் விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான நிலையங்களைக் கொண்ட உலகின் ஐந்து முக்கிய நாடுகளைப் பற்றி இப்போது உங்களுக்குச் சொல்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 27

    1000 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை கொண்ட ஐந்து நாடுகள் எவை தெரியுமா..?

    அந்த பட்டியலில் முதலில் இருப்பது அமெரிக்கா. பரந்த நிலப்பரப்பு கொண்ட மக்கள் அதிகம் போக விரும்பும் நாடான அமெரிக்காவில்,  14,712 விமான நிலையங்கள் உள்ளன. உலகத்தில் உள்ள அதிக விமான நிலையங்கள் எண்ணிக்கை இதுவே. இதன் வழியாக மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு ஆண்டுதோறும் பயணிக்கின்றனர். இவற்றில் 102 சர்வதேச விமான நிலையங்கள் ஆகும்.

    MORE
    GALLERIES

  • 37

    1000 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை கொண்ட ஐந்து நாடுகள் எவை தெரியுமா..?

    1,000க்கும் மேற்பட்ட விமான நிலையங்களைக் கொண்ட நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசிலில் மொத்தம் 4,093 விமான நிலையங்கள் உள்ளன. இதில் 23 சர்வதேச விமான நிலையங்கள் மட்டுமே உள்ளன. முதல் இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும் உள்ள எண்ணிக்கை வித்தியாசத்தை மட்டும் கவனித்து பாருங்கள். இங்குள்ள பிரேசிலியா சர்வதேச விமான நிலையம் தான் நாட்டின் பிஸியான விமான நிலையம்.

    MORE
    GALLERIES

  • 47

    1000 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை கொண்ட ஐந்து நாடுகள் எவை தெரியுமா..?

    மெக்சிகோ 1714 விமான நிலையங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் அவற்றில் 36 மட்டுமே சர்வதேச பயணத்தை வழங்குகின்றன. 2015 இலை தொடங்கப்பட்ட பெனிட்டோ ஜுவரெஸ் சர்வதேச விமான நிலையம்(Benito Juarez International Airport ) தான் இங்குள்ள பிஸியான விமான நிலையம். அதிகப்படியான விமானங்கள் இங்கு தான் தரை இறங்குகின்றன.

    MORE
    GALLERIES

  • 57

    1000 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை கொண்ட ஐந்து நாடுகள் எவை தெரியுமா..?

    கனடாவில் 1467 விமான நிலையங்கள் உள்ளன. 1,000 விமான நிலையங்களைக் கொண்ட நாடுகளில் கனடா நான்காவது இடத்தில் உள்ளது. கனடா அதன் இயற்கை அழகு மற்றும் சுத்தமான சூழலுக்கு பெயர் பெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் கனடாவுக்கு வருகிறார்கள். இங்குள்ள டொராண்டோ சர்வதேச விமான நிலையத்தில் தான் அதிக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 67

    1000 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை கொண்ட ஐந்து நாடுகள் எவை தெரியுமா..?

    ரஷ்யாவில் மொத்தம் 1218 விமான நிலையங்கள் உள்ளன. அதிக  சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நாடுகளில்  ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. மாஸ்கோவில் மட்டுமே ஒரு நடுத்தர மற்றும் இரண்டு பெரிய விமான நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 80 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் விமான சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 77

    1000 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை கொண்ட ஐந்து நாடுகள் எவை தெரியுமா..?

    நம் இந்திய நாட்டில் மொத்தம் 486 விமான நிலையங்கள் மட்டுமே உள்ளன. 1000 விமான நிலையங்களில் பாதியை கூட நாம் இன்னும் எட்டவில்லை. 486 நிலையங்களில் விமான ஓடுதளங்கள், பறக்கும் பள்ளிகள் மற்றும் ராணுவ தளங்கள் அனைத்தும் அடங்கும். இதில் 34 சர்வதேச விமான நிலையங்கள் ,  10 சுங்க விமான நிலையங்கள் மற்றும் 103 உள்நாட்டு விமான நிலையங்கள் உட்பட மொத்தம் 137 விமான நிலையங்களை இந்திய விமான நிலைய ஆணையம்AAI நிர்வகிக்கிறது.

    MORE
    GALLERIES