முகப்பு » புகைப்பட செய்தி » lifestyle » படகு இல்ல அனுபவத்துக்கு ஏற்ற இந்தியாவின் சிறந்த 5 இடங்கள்..!

படகு இல்ல அனுபவத்துக்கு ஏற்ற இந்தியாவின் சிறந்த 5 இடங்கள்..!

இயற்கையை சுவாரஸ்யமாக அனுபவிக்க ஹவுஸ்போட் சிறந்த தேர்வாகும் . ஹோட்டல் பாணி வசதிகளைக் கொண்ட படகில் ஏரி அல்லது உப்பங்கழிக்கு நடுவில் நங்கூரமிட்டு ஹவுஸ்போட் அனுபவத்தை வழங்கும் பிற மாநிலங்கள் இருந்தாலும், இந்தியாவில் காயல் படகுகளுக்கான மிகவும் பிரபலமான இடமாக கேரளா உள்ளது. இந்தியாவின் சிறந்த படகு ஹவுஸ்போட் இடங்களைப் பாருங்கள்…

  • 15

    படகு இல்ல அனுபவத்துக்கு ஏற்ற இந்தியாவின் சிறந்த 5 இடங்கள்..!

    கர்நாடகாவில் உள்ள உடுப்பியில் ஸ்வர்ணா நதியில் படகுகள் வாடகைக்கு விடப்படுகின்றன. இந்த படகு நிலையானது அல்ல. மாறாக, அது இயக்கத்தில் இருக்கும். கலாச்சாரம் நிறைந்த கிராமங்கள், தென்னந்தோப்புகள் மற்றும் கறைபடியாத ஆற்றின் அழகு ஆகியவற்றை காணும் உல்லாச பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

    MORE
    GALLERIES

  • 25

    படகு இல்ல அனுபவத்துக்கு ஏற்ற இந்தியாவின் சிறந்த 5 இடங்கள்..!

    கோவாவின் சபோரா மற்றும் மண்டோவி நதிகளின் உப்பங்கழிப் பகுதியைச் சுற்றி ஒரு நாள் உல்லாசப் பயணத்தையும் அதன்பின் ஒரு மாலை நேர பொழுதுபோக்கையும் மேற்கொள்ளலாம். கோவா உணவுகள் தங்கும் காலம் முழுவதும் வழங்கப்படும். பொதுவாக பாரம்பரிய கிராமங்கள், தென்னை பண்ணைகள், மீன்பிடி கிராமங்கள், கோட்டைகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் பிற இடங்கள் வழியாக பயணிக்கும்.

    MORE
    GALLERIES

  • 35

    படகு இல்ல அனுபவத்துக்கு ஏற்ற இந்தியாவின் சிறந்த 5 இடங்கள்..!

    படகு வீடுகளைப் பற்றி விவாதிக்கும்போது ஜம்முவை விட முடியாது. ஸ்ரீநகர் பயணம் படகு வீடு இல்லையேல் நிறைவு பெறாது. ஹிமாலய பகுதியில் உள்ள தால் ஏரியில், பல்வேறு படகு பயண அனுபவங்கள் உள்ளன. மலை காட்சிகள், படகில் அமைந்துள்ள கடை வீதிகள் முதலியவற்றை மிஸ் பண்ண கூடாது.

    MORE
    GALLERIES

  • 45

    படகு இல்ல அனுபவத்துக்கு ஏற்ற இந்தியாவின் சிறந்த 5 இடங்கள்..!

    மகாராஷ்டிராவில் உப்பங்கழிகளை கொண்ட ஒரே இடம் தர்கர்லி. படகில் பயணம் செய்யும்போது, ​​நீங்கள் பல கடற்கரைகளுக்கு சென்று ரசிக்கலாம். படகு பயணத்தோடு ஸ்கூபா டைவிங் அல்லது ஸ்நோர்கெலிங் போன்ற நீர் விளையாட்டுகளையும் செய்யலாம்.

    MORE
    GALLERIES

  • 55

    படகு இல்ல அனுபவத்துக்கு ஏற்ற இந்தியாவின் சிறந்த 5 இடங்கள்..!

    கேரளாவின் பாரம்பரிய படகு கெட்டுவல்லம் என்று அழைக்கப்படுகிறது. ஆலப்புழா, வேம்பநாடு மற்றும் கொல்லம் ஆகியவை ஹவுஸ்போட் அனுபவத்திற்கு பிரபலமானது. முக்கியமாக கேரளாவில் உள்ள அலெப்பி, கிழக்கின் வெனிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES