இம்மாகுலேட் தேவாலயம் : போர்ச்சுகீசிய ஆட்சியாளர்கள் முலமாக கடந்த 1541ஆம் ஆண்டில் கட்டப்பட்டது ‘தி அவர் லேடி ஆஃப் தி இம்மாகுலேட் கன்செப்சன் சர்ச்’ ஆகும். அதாவது, ஏறக்குறைய 6 நூற்றாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கின்ற தேவாலயம் இதுவாகும். போர்ச்சுகீசிய பரோக் கட்டடக் கலை வடிவத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. எண்ணற்ற திரைப்படங்களிலும் இதனை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
மகோஸ் கோட்டை : இதுவும் போர்ச்சுகீசிய மன்னர்கள் கட்டிய கோட்டை தான். கடந்த 1,551ஆம் ஆண்டில் கட்டியுள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் பெருமளவு இது சேதமடைய தொடங்கிவிட்டது. இந்த நிலையில் 1993ஆம் ஆண்டு இதனை புதுப்பிக்கும் பணியை ஜெரார்டு டா கன்ஹா என்ற கட்டட வடிவமைப்பாளர் மேற்கொண்டார். தற்போது அனேக சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்குரிய இடமாக உள்ளது.