முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோவா ட்ரிப்பில் மிஸ் பண்ணக்கூடாத 5 முக்கிய இடங்கள்..!

கோவா ட்ரிப்பில் மிஸ் பண்ணக்கூடாத 5 முக்கிய இடங்கள்..!

சுத்தமான கடற்கரைகள், அழகான கிராமங்கள், வளமான வரலாறு மற்றும் துடிப்பான கலாச்சாரம் ஆகியவற்றிற்கு பிரபலமான இடத்தின் சிறந்த ஸ்பாட்கள்..

  • 16

    கோவா ட்ரிப்பில் மிஸ் பண்ணக்கூடாத 5 முக்கிய இடங்கள்..!

    பார்ட்டி நகரமான கோவா அதைத் தாண்டி  சுத்தமான கடற்கரைகள், அழகான கிராமங்கள், வளமான வரலாறு மற்றும் துடிப்பான கலாச்சாரம் ஆகியவற்றிற்கு பிரபலமானது. அந்த நகரத்திற்கு இந்த கோடை சுற்றுலாவை திட்டமிட்டால் மிஸ் செய்ய கூடாத இடங்களை உங்களுக்கு சொல்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 26

    கோவா ட்ரிப்பில் மிஸ் பண்ணக்கூடாத 5 முக்கிய இடங்கள்..!

    மோர்ஜிம் பீச் சுத்தமான நீர், மென்மையான மணல் மற்றும் அமைதியான சுற்றுப்புறங்களுக்கு பெயர் பெற்ற அமைதியான கடற்கரையாகும். இந்த இடம் அழிந்து வரும் பல வகையான ஆமைகளுக்கு கூடு கட்டும் இடமாகவும் உள்ளது, இது இயற்கை ஆர்வலர்களுக்கு சரியான இடமாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    கோவா ட்ரிப்பில் மிஸ் பண்ணக்கூடாத 5 முக்கிய இடங்கள்..!

    பழைய கோவா அதன் வளமான வரலாறு மற்றும் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலைக்கு பிரபலமான உலக பாரம்பரிய தளமாகும். இந்த இடத்தில் உலகின் மிகச்சிறந்த தேவாலயங்கள் மற்றும் பழங்கால அருங்காட்சியகங்கள் கோவாவின் வளமான மற்றும் புகழ்பெற்ற கடந்த காலத்தை சித்தரிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 46

    கோவா ட்ரிப்பில் மிஸ் பண்ணக்கூடாத 5 முக்கிய இடங்கள்..!

    போர்த்துகீசிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக 17 ஆம் நூற்றாண்டு கோட்டையாக சின்குரிம் கடற்கரையில் ஃபோர்ட் அகுவாடா கட்டப்பட்டது. இன்று, இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், மயக்கும் சூரிய அஸ்தமனக் காட்சியை ரசிக்க ஏற்ற இடமாகவும் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    கோவா ட்ரிப்பில் மிஸ் பண்ணக்கூடாத 5 முக்கிய இடங்கள்..!

    துத்சாகர் நீர்வீழ்ச்சி 320 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் நான்கு அடுக்கு நீர்வீழ்ச்சியாகும். பசுமையான காடுகளால் சூழப்பட்ட இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகிலேயே மும்பை- கோவா ரயில்கள் செல்கின்றன. அந்த ரயிலில் பயணிக்கும் பொது அருவியில் சாரல்களை அனுபவிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 66

    கோவா ட்ரிப்பில் மிஸ் பண்ணக்கூடாத 5 முக்கிய இடங்கள்..!

    பனாஜி நகரம் கோவாவின் தலைநகரம் மற்றும் இந்திய மற்றும் போர்த்துகீசிய கலாச்சாரங்களின் தனித்துவமான கலவையை அனுபவிக்கும் சிறந்த இடமாகும். இது இம்மாகுலேட் கன்செப்ஷன் சர்ச் மற்றும் மேரி இம்மாகுலேட் சர்ச் போன்ற பல முக்கிய அடையாளங்களை கொண்டுள்ளது

    MORE
    GALLERIES