மனித இனம் தொடங்கிய இடமாக கருதப்படும் ஆப்பிரிக்க கண்டத்தின் அடையாளமாக நைல் நதிக்கரையில் வாழ்ந்த மக்களின் எச்சங்கள் எகிப்து நாட்டின் பல பகுதிகளிலும் விருந்து கிடக்கிறது. உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள் முதல் பண்டைய நகரங்கள் வரை எகிப்தில் உள்ள சிறந்த இடங்கள் மற்றும் செய்ய வேண்டிய விஷயங்களை பட்டியலிடுகிறோம். எகிப்து செல்லும்போது இதை கவனத்தில் கொள்ளுங்கள்
அல் கிசா பாலைவனத்தில் உள்ள கிசாவின் பெரிய பிரமிட்(great pyramid of giza) மிகப்பெரிய எகிப்திய பிரமிடு மற்றும் நான்காவது வம்சத்தின் பாரோ குஃபுவின் கல்லறை ஆகும். கிமு 26 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுமார் 27 வருடங்கள் கட்டப்பட்ட இந்த பிரமிடு, பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் மிகப் பழமையானது, மேலும் இது பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படாமல் அப்படியே உள்ளது. இந்த பிரமாடுகளுக்குள் என்ன இருக்கிறது என்பதை இன்று வரை ஆராய்ந்து வருகின்றனர்.
அலெக்ஸாண்டிரியாவின் பண்டைய நகரம் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அலெக்ஸாண்ட்ரியாவின் பண்டைய நகரத்தில் முக்கியமாக பிப்லியோதேகா அலெக்ஸாண்ட்ரினா(Bibliotheca Alexandrina) என்று அழைக்கப்படும் பண்டைக்கால பெரிய நூலகத்தை பார்வையிடவும். வரலாற்று சான்றுகள் பல இங்கிருந்து எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.