நாடுவிட்டு நாடு போக வேண்டும் என்றால் ரயில், சாலை வழி, கப்பல் வழி எல்லாம் நீண்ட நாட்கள் எடுக்கும். அதே நேரம் விமானத்தில் போனால் சில மணி நேரங்களில் போய் விடலாம். ஆனால் அதிலும் ஒரு நாள் முழுக்க பயணிக்கும் நான்-ஸ்டாப் (non stop) விமானங்கள் இருக்கிறது என்பது தெரியுமா? உலகின் கிழக்கு மூலையில் இருந்து மேற்கு மூலை வரை ஒரே விமானத்தில் பயணிக்க முடியும். உலகின் நீண்ட விமான பயங்கங்கள் பற்றி இதில் பார்ப்போம்.
அடுத்தபடியாக இருப்பதும் சிங்கப்பூரில் இருந்து பறக்கும் விமானம் தான். சிங்கப்பூர் (SIN) மற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் அமைந்துள்ள நெவார்க் (Newark)(EWR) நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தான் அது. இந்த விமானம் 9,523 மைல்கள் பயணிக்க 18 மணிநேரம், 30 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்கிறது.
பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் தலைநகரான பெர்த் (Perth)(PER) நகரத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டன் (LHR) நகரத்தை அடையும் விமானம் ஆகும். குவாண்டாஸ் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், 9,009 மைல்கள் தூரத்தை 17 மணிநேரம், 20 நிமிடங்களில் பறந்து கடக்கிறது
பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது குவாண்டாஸ் விமான சேவையை சேர்ந்த 17 மணி 35 நிமிடங்கள் பயணிக்கும் விமானம் தான். இந்த விமானம் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள மெல்போர்ன் (Melbourne )(MEL) நகரத்தையும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ்(dallas) (DFW) நகரத்தையும் இணைக்கிறது. இதன் மொத்த பயண தூரம் 8,992 மைல்கள்
ஐந்தாவது இடத்தில் இருப்பது நியூஸிலாந்து நாட்டில் உள்ள வடக்கு தீவில் அமைந்துள்ள ஆக்லாந்து (AKL)(Auckland) நகரத்தில் இருந்து கிளம்பி, 8,828 மைல்கள் கடந்து அமெரிக்காவின் நியூயார்க் (JFK) விமான நிலையத்தை அடையும் ஏர் நியூசிலாந்து விமானம் தான். இதன் மொத்த பயண நேரம் என்பது, 17 மணிநேரம், 50 நிமிடங்கள்