முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கர்நாடகாவின் சிக்மகளூருக்கு ஏன் ஒரு முறையேனும் போயிட்டு வரணும் தெரியுமா..?

கர்நாடகாவின் சிக்மகளூருக்கு ஏன் ஒரு முறையேனும் போயிட்டு வரணும் தெரியுமா..?

சிக்மங்களூர், மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறந்த மலையேற்றப் பாதைகளை வழங்குகிறது. 

 • 16

  கர்நாடகாவின் சிக்மகளூருக்கு ஏன் ஒரு முறையேனும் போயிட்டு வரணும் தெரியுமா..?

  இயற்கை ஆர்வலர்கள், சாகச பிரியர்கள், பயணத்தை ரசிக்கும் மக்கள், பாரம்பரிய தலங்களைத் தேடும் மக்கள் என்று எல்லா தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் இடமாக கர்நாடகம் உள்ளது என்று நிச்சயம் சொல்லலாம். அதிலும் குறிப்பாக சிக்மங்களூர் முக்கியமான இடம். அந்த இடத்திற்கு இந்த கோடை விடுமுறைக்கு நிச்சயம் ட்ரிப் போடலாம். காரணம்...

  MORE
  GALLERIES

 • 26

  கர்நாடகாவின் சிக்மகளூருக்கு ஏன் ஒரு முறையேனும் போயிட்டு வரணும் தெரியுமா..?

  சிக்மகளூர் அதன் அற்புதமான இயற்கை அழகுக்காக அறியப்படுகிறது.  பசுமையான மலைகள்,  மற்றும் நீர்வீழ்ச்சிகளால் சூழப்பட்டுள்ளது. சிக்மகளூரில் ஹெப்பே நீர்வீழ்ச்சி, ஜாரி நீர்வீழ்ச்சி மற்றும் கல்ஹட்டி நீர்வீழ்ச்சிகள் உட்பட பல அழகிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 36

  கர்நாடகாவின் சிக்மகளூருக்கு ஏன் ஒரு முறையேனும் போயிட்டு வரணும் தெரியுமா..?

  அந்த குளிர்ச்சியோடு சுட சுட காஃபி ஒன்று குடித்தால் அப்படி தான் இருக்குங்க. சிக்மங்களூர் காபி தோட்டங்களுக்கு பிரபலமானது. இது நாட்டின் சிறந்த காபி எஸ்டேட்டுகளின் தாயகமாக விளங்குவதோடு இங்கு நீங்கள் தோட்டங்களில் இருந்து நம் வீடு காஃபி கப்களுக்கு காஃபி எப்படி வருகிறது என்றும் தெரிந்துகொள்ளலாம். வித்தியாசமான காஃபி வகைகளையும் சுவைக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 46

  கர்நாடகாவின் சிக்மகளூருக்கு ஏன் ஒரு முறையேனும் போயிட்டு வரணும் தெரியுமா..?

  சிக்மங்களூர், மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறந்த மலையேற்றப் பாதைகளை வழங்குகிறது. முல்லயனகிரி மலையேற்றம், குத்ரேமுக் மலையேற்றம் மற்றும் பாபா புதன்கிரி மலையேற்றம் ஆகியவை பிரபலமான சில பாதைகளில் அடங்கும். இங்கு பல தனியார் ட்ரெக்கிங் குழுக்கள் உங்களை மலைகளுக்கு உள்ளே அழைத்துச்செல்ல காத்திருக்கின்றன. தனியாகவும் வனத்துறையிடம் அனுமதி பெற்று செல்லலாம்.

  MORE
  GALLERIES

 • 56

  கர்நாடகாவின் சிக்மகளூருக்கு ஏன் ஒரு முறையேனும் போயிட்டு வரணும் தெரியுமா..?

  குழந்தைகள் விலங்குகளை அருகில் இருந்து பார்த்து ரசிக்க விரும்புவர். அதற்கு, பத்ரா வனவிலங்கு சரணாலயம் மற்றும் குத்ரேமுக் தேசிய பூங்கா உட்பட பல வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களும் இங்கு அமைந்துள்ளது. பார்வையாளர்கள் பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகளை இங்கு காணலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  கர்நாடகாவின் சிக்மகளூருக்கு ஏன் ஒரு முறையேனும் போயிட்டு வரணும் தெரியுமா..?

  காடு மலை எல்லாம் வேண்டாம். பக்தி மாயமான இடம் என்றால் அதற்கும் இருக்கே.. சிக்மகளூர் பல பழமையான கோயில்கள் மற்றும் வரலாற்று தலங்களைக் கொண்டுள்ளது. வீரபத்ரா கோயில், சிருங்கேரி சாரதா பீடம் மற்றும் பெலவாடி கோயில் ஆகியவை மிகவும் பிரபலமானவை.

  MORE
  GALLERIES