முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » மது அருந்தும் சிலை முதல் பார்வை கொடுக்கும் தேவி வரை... 7 விசித்திரமான அம்மன் கோயில்களுக்கு சென்று வாருங்கள்..!

மது அருந்தும் சிலை முதல் பார்வை கொடுக்கும் தேவி வரை... 7 விசித்திரமான அம்மன் கோயில்களுக்கு சென்று வாருங்கள்..!

இங்குள்ள ஒன்பது தெய்வீக சிலைகளும் தந்திர மந்திரம் மற்றும் சித்த பீடத்தின் அதிசய இடங்களாக கருதப்படுகின்றன.

  • 18

    மது அருந்தும் சிலை முதல் பார்வை கொடுக்கும் தேவி வரை... 7 விசித்திரமான அம்மன் கோயில்களுக்கு சென்று வாருங்கள்..!

    பார்வதி தேவியின் 108 சக்தி பீடங்களில் சில வித்தியாசமான கதைகளை கொண்ட சக்தி கோவில்கள் மத்தியபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளன. மது குடிக்கும் தேவி முதல் பார்வை கொடுக்கும் தேவி வரை 7 தேவியர் கோவில்களை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 28

    மது அருந்தும் சிலை முதல் பார்வை கொடுக்கும் தேவி வரை... 7 விசித்திரமான அம்மன் கோயில்களுக்கு சென்று வாருங்கள்..!

    மா சாமுண்டா மற்றும் மா துல்ஜா தேவி கோயில் மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸில்( Dewas) அமைந்துள்ளது. பார்வதி தேவியின் 108 சக்திபீடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மலை கோவில் இருக்கும் இடத்தில் கொடூர அரக்கனை பார்வதி தேவி வதம் செய்யும்போது, தேவியின் இரத்தம் சிந்தியதாக நம்புகின்றனர். அதே போல ஒரே இடத்தில் இரண்டு அம்மன்களுக்கு இருக்கும் கோவில் இதுதான்.

    MORE
    GALLERIES

  • 38

    மது அருந்தும் சிலை முதல் பார்வை கொடுக்கும் தேவி வரை... 7 விசித்திரமான அம்மன் கோயில்களுக்கு சென்று வாருங்கள்..!

    சுமார் 300 ஆண்டுகள் பழமையான மா காவல்கா(Maa Kavalka) கோயில் ரத்லமில்(Ratlam) அமைந்துள்ளது.மதம் சார்ந்த கதைகளின்படி, இந்த கோவிலில் உள்ள காவல்கா அம்மன் சிலை, காளி மற்றும் கால பைரவர் சிலைகள் மது அருந்துகின்றன. இதன் காரணமாக இங்கு வரும் எல்லா பக்தர்களும் அன்னை தேவியை மகிழ்விக்க மதுபானம் வழங்குகிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 48

    மது அருந்தும் சிலை முதல் பார்வை கொடுக்கும் தேவி வரை... 7 விசித்திரமான அம்மன் கோயில்களுக்கு சென்று வாருங்கள்..!

    மா பீதாம்பர சக்தி பீடம் மத்தியப் பிரதேசத்தின் டாடியா(datia) நகரில் அமைந்துள்ளது. இந்த இடம் தபஸ்தலி என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ பீதாம்பர பீடம் 1920 களில் ஸ்ரீ ஸ்வாமி ஜியால் நிறுவப்பட்ட பகளாமுகியின் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். ஆசிரமத்திற்குள் தூமாவதி தேவியின் கோவிலையும் நிறுவினார். பத்து மகாவித்யாக்களில் இருவர் தூமாவதி மற்றும் பகளாமுகி.

    MORE
    GALLERIES

  • 58

    மது அருந்தும் சிலை முதல் பார்வை கொடுக்கும் தேவி வரை... 7 விசித்திரமான அம்மன் கோயில்களுக்கு சென்று வாருங்கள்..!

    மத்தியப் பிரதேசத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான மாந்தரே அன்னையின் ஆலயமும் குவாலியரில் அமைந்துள்ளது. இந்த கோவில் கம்பு(Kampu ) பகுதியில் உள்ள புற்று மலையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எட்டு கரங்களுடன் மகிஷாசுர மர்தினி மஹாகாளியின் சிலை உள்ளது.

    MORE
    GALLERIES

  • 68

    மது அருந்தும் சிலை முதல் பார்வை கொடுக்கும் தேவி வரை... 7 விசித்திரமான அம்மன் கோயில்களுக்கு சென்று வாருங்கள்..!

    மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள பழமையான தந்திர வித்யா பத்ரிகா 'சண்டி'யில் பிஜாசென் மாதா கோயில் உள்ளது. இங்குள்ள ஒன்பது தெய்வீக சிலைகளும் தந்திர மந்திரம் மற்றும் சித்த பீடத்தின் அதிசய இடங்களாக கருதப்படுகின்றன.தேவி மிகவும் சக்தி வாய்ந்தவளாகக் கருதப்படுகிறாள். பார்வையற்றவர்கள் அன்னையின் அருளால் இழந்த பார்வையை மீண்டும் பெற முடியும் என்பது நம்பிக்கை.

    MORE
    GALLERIES

  • 78

    மது அருந்தும் சிலை முதல் பார்வை கொடுக்கும் தேவி வரை... 7 விசித்திரமான அம்மன் கோயில்களுக்கு சென்று வாருங்கள்..!

    மத்தியப் பிரதேசத்தின் சத்னாவில் உள்ள திரிகுத் மலை சிகரத்தின் நடுவில் சாரதா தேவியின் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் மைஹார் என்ற பெயரில் புகழ்பெற்றது. சாரதா தேவியைத் தவிர, காளி, சேஷ் நாக், துர்கா, கௌரி சங்கர், கால பைரவி, அனுமன் ஆகிய கடவுள்; சிலைகள் இங்கு உள்ளது. 1001 படிகள் ஏறி சரஸ்வதி தேவியின் ஆலயத்தை அடைய வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 88

    மது அருந்தும் சிலை முதல் பார்வை கொடுக்கும் தேவி வரை... 7 விசித்திரமான அம்மன் கோயில்களுக்கு சென்று வாருங்கள்..!

    மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ் என்ற அடர்ந்த காடுகளில் ரத்தன்கர் வாலி மாதா(Ratangarh Wali Mata) கோவில் அமைந்துள்ளது.இந்த கோவில் சிந்து நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். யாரையாவது பாம்பு கடித்து, மா ரதன்கர் என்ற பெயரில் இங்கு கிடைக்கும் நூலைக் கட்டினால், அவர் குணமடைவார் என்று நம்பப்படுகிறது. ஆனால் பாய் தூஜ் திருவிழாவில், பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர் பிணைப்பை அவிழ்க்க இங்கு வர வேண்டும்.

    MORE
    GALLERIES