ஒரு கிராமத்தில் இருக்கும் எல்லோரும் தனிப்பட்ட ஒரு வில்லா, ஒரு கார், குறைந்தது 15 லட்சம் பேங்க் பேலன்ஸ் வைத்திருக்கிறார்கள். அங்கு செல்லும் மக்களுக்கும் இது இலவசமாக வழங்கப்படும் என்றால் யார் தான் போக யோசிப்பார்கள்? அப்படியான கிராமம் எங்கே இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள். அதை பற்றிதான் இந்த தொகுப்பில் சொல்ல இருக்கிறோம்.
சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜியாங்யின் கவுண்டியில் உள்ள ஹுவாக்ஸி Huaxi கிராமம் சீனாவின் பணக்கார கிராமமாக கருதப்படுகிறது. இந்த சூப்பர் கிராமத்தில் 2009 ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு குடும்பமும் ஒரு வீடு மற்றும் குறைந்தபட்சம் ஒரு கார், $150,000 மதிப்பில் பணம் என இந்த கிராம சமூகத்தால் வழங்கப்பட்ட சொத்துக்களை கொண்டிருந்தனர் .
அதன் அடிப்படையில், விவசாயம், வணிகம், தொழில்துறை அனைத்தும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. முக்கியமாக நீல நிற தகர கூரை தொழிற்சாலைகள், அவை விடும் புகை மூட்டங்கள், கிராமத்தின் ஒரு தொழிற்துறைப் பகுதியை காட்டுகிறது. குறிப்பாக, இங்கிருந்து சீன நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு லாபம் ஈட்டி தரப்படுகிறது.
சுற்றியுள்ள பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதன் ஆடம்பரத்திற்காக மட்டுமல்லாமல் அதன் சீரான தன்மைக்காகவும் செழிப்பிற்காகவும் புகழ் பெற்றுள்ளது. 400 குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்திற்கு புதிதாக குடியேறும் மக்களுக்கு ஐரோப்பிய பாணி வில்லா, , கார், வேலை எல்லாமே இலவசம். அதுமட்டும் இல்லாமல் வளர்ந்த நாடுகளில் இருப்பது போல கல்வி, மருத்துவ வசதி, சுகாதார வசதிகள், போக்குவரத்தும் இலவசம்.
இந்த கிராமத்தில் தீம் பார்க், நட்சத்திர விடுதிகள் ஹெலிகாப்டர் டாக்சிகள், என்று எல்லா ஆடம்பர வசதிகளும் உள்ளன. அது மட்டும் இல்லாமல் தங்க பந்து போன்ற அமைப்பை தாங்கும் 74 தள கட்டிடம், சிட்னி ஓபரா ஹவுஸ், நாஞ்சாங்கில் பெரிய சுவவர், அமெரிக்காவின் சுதந்திர தேவி போன்ற உலக புகழ்பெற்ற கட்டிட அமைப்புகளின் பிரதிகளையும் கொண்டுள்ளது.