வார இறுதி வந்துவிட்டது. வாரம் முழுக்க வேலையை முடித்துவிட்டு வார இறுதியில் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைப்போம். கணினியையும் போனையும் பார்த்து கொண்டு கழிக்கும் நேரத்துக்கு இடையில் ஒரு நாள் சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தை பார்க்கலாம் என்று நினைப்போம். அந்த அழகான காட்சியை ரசிப்பதற்கு ஏற்ற இடங்கள் யில் என்னென்ன தெரியுமா?
சூரிய உதயம் அல்லது அஸ்தமனத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்ததும், அலைகளோடு கூடிய ஒரு கடல், அதில் பகுதி மூழ்கிய சூரியன், மணல் என்னும் காட்சி தான் நினைவுக்கு வரும். அதேபோல சென்னை மெரினா கடற்கரையும் கூறிய உதயமும் தவிர்க்க முடியாத ஒரு காம்போ. கலங்கரை விளக்கத்தோடு அந்த சாலையில் நடந்து சென்று கடலில் இருந்து எழும் சூரியனை பார்ப்பதே தனி சுகம்.
மெரினாவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. எனக்கு கொஞ்சம் தனிமையான இடம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பெஸ்ஸி என்று அழைக்கப்படும் பெசன்ட் நகர் கடற்கரை ஏற்றதாக இருக்கும். அதுவும் பெசன்ட் நகர் கடற்கரையோரம் உன்ன உணவகங்கள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அங்கே ஒரு டீ அல்லது காபி வாங்கி குடித்துக்கொண்டே சூரியனை ரசிப்பது நன்றாக இருக்கும்.
சூரிய உதயம் நீரோடு மட்டும் அல்ல மலையோடும் அழகாக இருக்கும் என்பதை கற்றுத்தருவதாக பரங்கி மலை இருக்கும். 2000 ஆண்டு பழமையை புதைத்து வைத்துள்ள செயின்ட் தாமஸ் மலையின் உச்சியை அடைய சுமார் 1 மணி நேரம் ஆகும் என்றாலும் அங்கு வீசும் தென்றலும் அதில் உலரும் வியர்வையோடு அழகான சூரிய உதய காட்சி அனுபவத்தையும் வழங்கும். அதோடு நகரத்தின் 360 டிகிரி காட்சியை பார்க்க முடியும்.
கிழக்குக் கடற்கரை சாலையில் லாங் டிரைவ் போவது மட்டும் அற்புதம் அல்ல. அந்த சாலையில் போகும் போது இடையில் இன்று கடற்கரையோரம் மங்கும் சூரியனை பார்ப்பதும் தனி அழகு தான். கோவளம் மற்றும் ஈசிஆர்/அக்கரை கடற்கரை, இஸ்கான் கோயில் போன்ற இடங்கள்,விஜிபி ரிசார்ட், கிப்லிங் கஃபே போன்ற இடங்கள் ECR இல் சூரிய அஸ்தமனத்தைக் காண மிகவும் பிரபலமான இடங்களாகும் .
பூங்காக்கள் மற்றும் பசுமையான இடங்களில் சூரிய அஸ்தமனத்தை அனுபவிப்பது உலகம் முழுவதும் பிரபலமான வழக்கமாகும். மாலை நேரம் மஞ்சள் வெயிலோடு அண்ணா நகரில் உள்ள டவர் பார்க், தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்கா மற்றும் அடையாரில் பரந்து விரிந்து கிடக்கும் அடையார் சுற்றுச்சூழல் பூங்கா ஆகிய இடங்களில் சூரிய அஸ்தமனத்தை அனுபவிக்கலாம்.
சென்னையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்கு வித்தியாசமான ஒரு வழி இருக்கிறது. வேளச்சேரி முதல் மெரினா வரும் லோக்கல் ரயில் பயணம் தான் அது. பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களைக் காணும் வேளச்சேரியில் தொடங்கி, MRTS பாதை அடையாறு , மயிலாப்பூர் கடந்து, இறுதியாக சேப்பாக்கத்தில் உள்ள மெரினா கடற்கரைக்குச் சென்று நிற்கும். மாலை நேரத்தில் இந்த வழியாக செல்லும் ரயில் பயணம் நிஜமாகவே ஸ்பெஷல் தான்.