முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்தியாவில் கலைநயங்களுடன் கூடிய சிற்பங்களால் பிரபலமடைந்த கோவில்கள்…

இந்தியாவில் கலைநயங்களுடன் கூடிய சிற்பங்களால் பிரபலமடைந்த கோவில்கள்…

இந்தியாவின் திறந்த, முற்போக்கான சிந்தனையை நிரூபிக்கும், சிறப்பான சிற்பங்களுக்கு புகழ்பெற்ற கோவில்களின் பட்டியல்.

 • 16

  இந்தியாவில் கலைநயங்களுடன் கூடிய சிற்பங்களால் பிரபலமடைந்த கோவில்கள்…

  இந்தியா பல்வேறு மதங்கள் பின்பற்றப்படும் நாடாகும். இந்தியாவில் மிகவும் பழமை வாய்ந்த கட்டிடக்கலை இன்றும் நிமிர்ந்து நிற்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் கோவில்கள் சிறந்து விளங்குகின்றன. நாடு முழுவதும் ஏராளமான கோவில்கள் உள்ளன. இந்தியாவின் திறந்த, முற்போக்கான சிந்தனையை நிரூபிக்கும், சிறப்பான சிற்பங்களுக்கு புகழ்பெற்ற கோவில்களின் பட்டியல் குறித்து இங்கு காண்போம்.

  MORE
  GALLERIES

 • 26

  இந்தியாவில் கலைநயங்களுடன் கூடிய சிற்பங்களால் பிரபலமடைந்த கோவில்கள்…

  கஜுராஹோ கோவில் : கஜுராஹோ கோவில்கள் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜான்சியில் இருந்து 175 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த கோயில் சண்டேலா வம்சத்தின் அரசர்களால் கட்டப்பட்டது. கஜுராகோ கோவில் என்பது ஒரே கோவில் அல்ல, 85 கோவில்கள் கொண்டது. ஆனால் தற்போது 22 கோவில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இவற்றை ஒட்டு மொத்தமாக கஜுராகோ கோவில் என்று அழைக்கிறார்கள். 18 இந்து கோவில்களும், 4 சைன கோவில்களும், இருக்கின்றன. இந்த வளாகத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலிலுமே வித்தியாசமான வடிவத்தில் உயரமான கோபுரங்களுடன் கட்டப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 36

  இந்தியாவில் கலைநயங்களுடன் கூடிய சிற்பங்களால் பிரபலமடைந்த கோவில்கள்…

  மொதேரா சூரிய கோவில் : மோதேரா சூரியன் கோயில், குஜராத் மாநிலத்தில் மெகசானா மாவட்டத்தில், புஷ்பாவதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. அகமதாபாத்திலிருந்து 102 கி. மீ., தொலைவிலும், மெக்சனா நகரத்திலிருந்து 25 கி. மீ., தொலைவிலும் இந்த கோவில் உள்ளது. மோதெராவில் உள்ள சூரியக் கோவில் சுவர்களில் மிகவும் கலை நயமான வேலைப்பாடுகள் நிறைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது எந்த சடங்குகளும் நடத்தப்படவில்லை என்றாலும், இது இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  இந்தியாவில் கலைநயங்களுடன் கூடிய சிற்பங்களால் பிரபலமடைந்த கோவில்கள்…

  மார்க்கண்டேஸ்வர் கோவில் : வைங்கங்கா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோவில் மிகவும் புனிதமானது என்று நம்பப்படுகிறது, இது கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் அடிக்கடி இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி அன்று அதிக எண்ணிக்கையில் மக்கள் இங்கே வந்து சிவனை வழிப்பட்டு செல்கிறார்கள். இந்த கோவில் ஒரே இரவில் மர்மமான முறையில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சுவர்களில் பல்வேறு ஓவியங்கள் உள்ளது. மேலும் பல்வேறு வகையான பாலுணர்வு தூண்டும் சிற்பங்களும் உள்ளன. எனவே இந்த கோவிலை கவர்ச்சி தூறல் என்று கூறுகிறார்கள். இந்த கோவிலை கட்டியவர்கள் தீய சக்திகள் கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 56

  இந்தியாவில் கலைநயங்களுடன் கூடிய சிற்பங்களால் பிரபலமடைந்த கோவில்கள்…

  திரிபுராந்தகர் கோவில் : கர்நாடகாவில் எண்ணற்ற சிறந்த கோவில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கட்டிடக்கலையில் சிறந்து விளங்குகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள திரிபுராந்தகர் கோவில் மேற்கு சாளுக்கியர்களால் கட்டப்பட்டது, இது கர்நாடகாவில் சிவமோகா மாவட்டத்தில் உள்ள வரலாற்று நகரமான பள்ளிகாவியில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வெளிப்புறச் சுவர்களில் காமசூத்ராவில் இருந்து நிறைய சிற்பங்களை நாம் காணலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  இந்தியாவில் கலைநயங்களுடன் கூடிய சிற்பங்களால் பிரபலமடைந்த கோவில்கள்…

  திருமயம் கோவில் : தமிழ்நாட்டில் உள்ள திருமயத்தில் அமைந்துள்ள கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக இக்கோவில் ஒரே மலையில் குடைந்து சிவனும், பெருமாள் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 7-ம் நூற்றாண்டு சுமார் 1300 வருடங்களுக்கு முன் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில். இந்த கோவில் மகேந்திரவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. மேலும் வெளிப்புற சுவர்களில் காமசூத்திரத்தின் அத்தியாயங்களை நீங்கள் காணலாம். இது புனித இடத்திற்குள் நுழைவதற்கு முன்பு கோவிலுக்கு வெளியே தங்கள் ஆசைகளை விட்டுவிட வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES