முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்க குழந்தைகளுக்கு வன விலங்கு மீது ஆர்வம் அதிகமா..? அப்போ இந்த இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்..!

உங்க குழந்தைகளுக்கு வன விலங்கு மீது ஆர்வம் அதிகமா..? அப்போ இந்த இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்..!

sensational places to see wildlife in India | உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் வன விலங்கு மீது அதீத ஆர்வமா?. அப்போ, இந்த கோடை விடுமுறைக்கு இந்த இடங்களுக்கு சொல்லுங்க. இயற்கை அழகுடன் வன விலங்குகளையும் கண்டு ரசிக்கலாம்.

 • 19

  உங்க குழந்தைகளுக்கு வன விலங்கு மீது ஆர்வம் அதிகமா..? அப்போ இந்த இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்..!

  அதிக வனவிலங்குகளை கொண்டுள்ள நாடு இந்தியா. இதனால் தான், உலகம் முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கிறது. வடகிழக்கில் மாபெரும் மலைத்தொடர்கள், கிழக்கில் சதுப்பு நிலங்கள், தெற்கில் முனை வரை, இந்தியாவில் ஏராளமான வனவிலங்கு பாதுகாப்பு பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள சில சரணாலயங்கள் பார்வையாளர்களுக்கு சில சிறந்த வனவிலங்கு அனுபவங்களை வழங்குகின்றன. இந்தியாவில் உள்ள அழகிய வனவிலங்குகளை கண்டு ரசிக்க போகவேண்டிய இடங்கள் பற்றி நாங்க உங்களுக்கு கூறுகிறோம்.

  MORE
  GALLERIES

 • 29

  உங்க குழந்தைகளுக்கு வன விலங்கு மீது ஆர்வம் அதிகமா..? அப்போ இந்த இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்..!

  ரந்தம்பூர் தேசிய பூங்கா ( Ranthambore National Park) : ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த தேசியப் பூங்கா முன்பு (மன்னர் காலத்தில்) அப்பகுதியை ஆண்ட மகாராஜாக்களின் வேட்டையாடும் இடமாக இருந்தது. தற்போது, பல அரிய வகை பறவைகள், மான்கள், புலிகள் மற்றும் பல விலங்கு இனங்களின் காப்பகமாக இது உள்ளது.

  MORE
  GALLERIES

 • 39

  உங்க குழந்தைகளுக்கு வன விலங்கு மீது ஆர்வம் அதிகமா..? அப்போ இந்த இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்..!

  கிர் தேசிய பூங்கா : குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள கிர் தேசிய பூங்கா சிங்கங்களுக்கு பெயர் பெற்ற ஒரு இடம் ஆகும். அதேநேரம் இந்த பூங்காவானது சிறுத்தைகள், சோம்பல் கரடிகள், பாம்புகள், முதலைகள், மானிட்டர் பல்லிகள் மற்றும் பல உயிரினங்களின் காப்பகமாகவும் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 49

  உங்க குழந்தைகளுக்கு வன விலங்கு மீது ஆர்வம் அதிகமா..? அப்போ இந்த இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்..!

  ஜிம் கார்பெட் தேசிய பூங்கா (Jim Corbett National Park) : உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மலை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்கா, இந்தியாவின் பிரபலமான ஒரு வன விலங்கு சரணாலயம் ஆகும். அதேநேரம், இந்தியாவில் அதிக புலிகள் கொண்ட ஒரு வன விலங்கு காப்பகமாகவும் இது உள்ளது.

  MORE
  GALLERIES

 • 59

  உங்க குழந்தைகளுக்கு வன விலங்கு மீது ஆர்வம் அதிகமா..? அப்போ இந்த இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்..!

  காசிரங்கா தேசிய பூங்கா (Kaziranga National Park) : அசாமில் அமைந்துள்ள இந்த காசிரங்கா தேசிய பூங்கா ஆனது, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கு பெயர் பெற்ற இடம் ஆகும். அதாவது, உலகிலேயே அதிகளவு ‘ஒற்றைக்கொம்பு காண்டா மிருகம்’ காணப்படும் ஒரு இடமாக இது உள்ளது.

  MORE
  GALLERIES

 • 69

  உங்க குழந்தைகளுக்கு வன விலங்கு மீது ஆர்வம் அதிகமா..? அப்போ இந்த இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்..!

  பன்னர்கட்டா உயிரியல் பூங்கா (Bannerghatta National Park) : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்கா, புலிகள், சிறுத்தைகள், யானைகள், புள்ளிமான்கள், சாம்பர் மான்கள், பட்டாம்பூச்சிகள், பாம்புகள் மற்றும் பல உயிரினங்களுக்கு பெயர் பெற்ற ஒரு இடம் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 79

  உங்க குழந்தைகளுக்கு வன விலங்கு மீது ஆர்வம் அதிகமா..? அப்போ இந்த இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்..!

  பெரியார் தேசிய பூங்கா : தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் அமைந்துள்ள பெரியார் தேசிய பூங்காவானது ஆசிய யானைகள், புலிகள், குரங்குகளுக்கு பெயர் பெற்ற ஒரு இடம் ஆகும். பசுமையான சரிவுகள் மற்றும் நிலப்பரப்புகளுடன் இருக்கும் இந்த பூங்கா, சுற்றுலா பயணிகள் பலரும் செல்ல விரும்பும் ஒரு இடம் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 89

  உங்க குழந்தைகளுக்கு வன விலங்கு மீது ஆர்வம் அதிகமா..? அப்போ இந்த இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்..!

  பாந்தவ்கர் தேசிய பூங்கா (bandhavgarh national park) : மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா, வெள்ளை புலிகளின் தாயகமாக உள்ளது. அதேநேரம் யானைகள், மான்கள், மலைப்பாம்பு உள்ளிட்ட ஊர்வனை மற்றும் பறவைகளுக்கும் ஒரு காப்பகமாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 99

  உங்க குழந்தைகளுக்கு வன விலங்கு மீது ஆர்வம் அதிகமா..? அப்போ இந்த இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்..!

  ஹெமிஸ் தேசிய பூங்கா (Hemis National Park) : கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள இந்த பூங்காவானது, இந்தியாவின் உயரமான வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாக உள்ளது. அதேநேரம் இங்கு, பனிச்சிறுத்தை, ஆசிய ஐபெக்ஸ், சிவப்பு நரி, திபெத்திய ஓநாய் போன்ற பல அழிந்து வரும் விலங்கினங்களை நாம் இங்கு காணலாம்.

  MORE
  GALLERIES