குளிர் காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கும் நேரம் காஷ்மீர் பகுதி அழகான துலிப்(tulip) மலர்களால் நிறைய காத்துகொண்டு இருக்கிறது. காஷ்மீரின் வண்ணங்கமயான சூழலை பார்க்க எண்ணினால் இந்த மாத இறுதி முதல் காஷ்மீருக்கு செல்ல திட்டத்தை போடுங்கள். படங்களிலும், பாடல்களிலும் பார்த்த துலிப் மலர்களை இந்தியாவில் நேரில் பார்க்கக்கூடிய சிறந்த நேரம் இதுதான்.
புகழ்பெற்ற தால் ஏரியை அடுத்து அமைந்துள்ள இந்த தோட்டம் ஸ்ரீநகரின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். சுமார் 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தோட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் தோட்டமாகும். தோட்டத்தில் 1.5 மில்லியன் டூலிப் மலர்கள் வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் வகைகளைக் கொண்டுள்ளன.\