தென்னிந்தியாவில் பல பகுதிகள் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் காட்சியளிக்கின்றன. மிகப் பெரிய மலைகள், பள்ளத்தாக்குகள், மாநகரங்கள், கடற்கரைகள் உள்ளிட்டவை இங்கு இருக்கின்றன. உங்கள் சுற்றுலா திட்டத்திற்கு ஏற்ற இடங்களாக இவை இருக்கும். தமிழகத்தின் ஊட்டி முதல் கர்நாடகத்தின் ஹம்பி, கூர்க் வரை ஏராளமான அழகிய இடங்களைக் கொண்டதாக தென்னிந்தியா இருக்கிறது. இப்போது இந்த இடங்களை சுற்றிப் பார்க்கலாம் வாங்க.
வயநாடு, கேரளா: கேரளாவில் நீங்கள் தவற விடக் கூடாத மிக அழகான இடம். அழகான இயற்கை காட்சிகள் மற்றும் பசுமை போர்த்திய மலைகளுடன் வயநாடு உங்களை வரவேற்கும். இயற்கையுடன் நீங்கள் அதிக நேரத்தை செலவிட விரும்பினால் இது உங்களுக்கு வசதியான இடமாக இருக்கும். மலையேற்றம், வனவிலங்குகளை பார்வையிடுவது, அணைப்பகுதியில் படகு சவாரி என ஆனந்தமாக இருப்பதற்கான அத்தனை இடங்களும் இங்கே இருக்கின்றன.