பசுமையான இயற்கை காட்சிகள், பழங்கால கோவில்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற ஒடிசாவின் மயூர்பஞ்ச் டைம் இதழின் 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த இடங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள 2 இடங்களில் ஒன்றாகும் . அதனால் உலக சுற்றுலா பயணிகள் இடையே பெரும் வரவேற்பையும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.
சிமிபால் தேசிய பூங்கா
இயற்கையின் அற்புதமான பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமான இது நீர்வீழ்ச்சிகள், புல்வெளிகள் மற்றும் அடர்ந்த காடுகளை உள்ளடக்கிய ஆன்மாவுக்கு திருப்தி அளிக்கும் அழகிய காட்சிகளில் உங்களை திளைக்கச்செய்யும் . ஜீப் சஃபாரி, இயற்கை முகாம் என்று பல சுவாரசிய விஷயங்களும் உள்ளது
ஜகன்னாதர் கோவில்
மயூர்பஞ்சில் உள்ள ஹரிபல்தேவ் கோவில் என்று அழைக்கப்படும் இந்த கோவில், ஒடிசாவில் பூரி மற்றும் கோராபுட்டில் உள்ள ஸ்ரீக்ஷேத்ராவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது மிகவும் பிரபலமான ஜகன்னாதா கோவில் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் ஜூலை இரண்டாவது வாரத்தில் நடைபெறும் வருடாந்திர ரத யாத்திரை ஒரு முக்கிய நிகழ்வாகும்.