உணவு, உடை, இருப்பிடம் என்ற மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று வீடு. வாழ்க்கையில் சம்பாதித்து எப்படியாவது ஒரு வீட்டைக் கட்டிவிடவேண்டும் என்று தான் மனிதர்கள் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அதே சமயம் தனது வீடு மற்றவர்களத்தை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக சில வித்தியாசமான வடிவமைப்புகளை கொண்ட வீடுகளை சிலர் அமைத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் முதலில் பார்க்க இருப்பது. கழிப்பறை வடிவ வீடு. வீட்டில் ஒரு அங்கம் தானே கழிப்பறை என்று கேட்கலாம். ஆனால்,
2007 அன்று, தென்கொரியா நாட்டின் சியோலுக்கு தெற்கே சுமார் 46 கிமீ தொலைவில் ஒருவர் தனது வீட்டையே கழிப்பறை வடிவத்தில் கட்டியுள்ளார். ஹேவூஜே என்று பெயரிடப்பட்ட இந்த வீடு உலக கழிவறை சங்கத்தின் தொடக்க சபையின் தலைவரது வீடாம்.
விமான வீடு : உயரத்தை பார்த்து பயப்படும் கம்போடியாவைச் சேர்ந்த க்ராச் போவ், தனது பயத்தைப் போக்க உதவும் ஒரு வழியாக விமானம் போன்ற வடிவிலான வீட்டைக் கட்டியுள்ளார். 43 வயதான அவர், 30 ஆண்டுகளாக கட்டுமானப் பணியில் இருந்து சேமித்த பணத்தை தனது இரண்டு படுக்கையறை, இரண்டு குளியலறை கொண்ட கான்கிரீட் வீட்டை உருவாக்க பயன்படுத்தியுள்ளார்.
முதலை வடிவில் வீடு: ஐவரி கோஸ்ட்டின் தலைநகரான அபிட்ஜானில் முதலை வடிவில் வீடு கட்டப்பட்டுள்ளது. கலைஞரான மௌசா காலோவின் இந்த வித்தியாசமான வீடு கட்டி முடிக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு துரதிர்ஷ்டவசமாக இறந்தார். 2008 இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த வீட்டு ஜன்னல்கள் மற்றும் ஒரு படுக்கை உட்பட, விசித்திரமான கான்கிரீட் அமைப்புகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
கால்பந்து வடிவ வீடு : ஜப்பானில் அமைந்துள்ளது இந்த கால்பந்து வடிவ வீடு. மிதக்கும் மற்றும் பூகம்பங்களை எதிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அமைப்பு இந்த வீட்டை குறைந்த வெப்பத்தில் வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக இது பூமிக்கு அடியில் புதைக்கப்படும் போது சீரான வெப்பத்தையும் குளிரையும் பராமரிக்கிறது. உண்மையான கால்பந்து போலவே 32 பக்க சுவர்களைக் கொண்டிருப்பதால் இது பூகம்பத்தைத் தாங்க உதவுகிறது.
தலைகீழ் வீடு: 2008 இல் கட்டப்பட்ட, ட்ராசென்ஹைடின் தலைகீழான வீடு ஜெர்மனியில் கட்டப்பட்ட தலைகீழான வீடுகளில் முதன்மையானது. அசாதாரணமான, தனித்துவமான புவிஈர்ப்பு விசாய்க்கினு எதிராக இருப்பதாக தோண்டும் இந்த வீட்டை போலந்து கட்டிடக் கலைஞர்களான கிளாடியஸ் கோலோஸ் மற்றும் செபாஸ்டியன் மிகிசியுக் ஆகியோர் காட்டியுள்ளனர்.