சஹாரா பாலைவனத்தில் கடும் பனி.. காணும் இடங்களிலெல்லாம் பனிக்கட்டிகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..
3,42,000 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட சஹாரா பாலைவனத்தில் கடந்த 42 ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்த அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
Web Desk | January 21, 2021, 1:56 PM IST
1/ 12
பூமியின் வெப்பமான இடங்கள் தற்போது பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளது என்பது கிட்டத்தட்ட நம்பமுடியாத சம்பவம் தான். ஆனால் தற்போது இந்த சம்பவம் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்துள்ளது.
2/ 12
உலகின் மிகவும் வெப்பம் நிறைந்த பாலைவனமான சஹாரா பாலைவனம், வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. இங்கு தற்போது வெப்பநிலை -2C க்கு குறைவாக உள்ளதால் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.
3/ 12
இதனால் உருவான பனிக்கட்டிகள் பாலைவனத்தின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. வெப்பம் அதிகம் நிலவும் சகாரா பாலைவனத்தின் மணல் பரப்பில் தற்போது பனி படர்ந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
4/ 12
இந்த அழகிய காட்சியை உள்ளூர் புகைப்படக்காரர் கரீம் பூச்செட்டா பதிவு செய்துள்ளார். ஜனவரி 13 அன்று அல்ஜீரியாவில் உள்ள பாலைவன நகரமான ஐன் செஃப்ராவுக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடர்ந்த நிறம் கொண்ட மண்ணில் பனிப் படர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
5/ 12
கண்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் பனிப்பொழிவால் காட்சியளிக்கும் சஹாரா பாலைவனத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகிறது.
6/ 12
"பாலைவனத்தின் நுழைவாயில்" என்று அழைக்கப்படும் ஐன் செஃப்ரா, கடல் மட்டத்திலிருந்து 1,000 மீ உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் அட்லஸ் மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஐன் செஃப்ரா மிகவும் வெப்பமான மற்றும் வறண்ட பகுதி ஆகும், ஆனால் தற்போது பனியால் சூழப்பட்டுள்ளது.
7/ 12
இது நிகழ்ந்த ஒரு அரிய நிகழ்வு என்றாலும், சஹாரா பாலைவனத்தில் அதிக அளவிலான பனிப்பொழிவு ஏற்படுவது இது முதல் முறை அல்ல..
8/ 12
3,42,000 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட சஹாரா பாலைவனத்தில் கடந்த 42 ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்த அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 3,42,000 சதுர மைல் பரப்பளவு என்பது கிட்டத்தட்ட அமெரிக்கா அளவிலான பகுதியாகும்.<br /><br />
9/ 12
சஹாரா பாலைவன நகரமான ஐன் செஃப்ராவில் முதன்முதலில் பனிப்பொழிவு சம்பவம் 1979 -ல் பதிவு செய்யப்பட்டது, அதை தொடர்ந்து டிசம்பர் 2016 மற்றும் ஜனவரி 2018ம் ஆண்டுகளில் பாலைவனம் 16 அங்குல பனியால் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
10/ 12
2016ம் ஆண்டில் நடைபெற்ற பனிப்பொழிவு காட்சிகள் டிசம்பர் 19, 2016 அன்று லேண்ட்சாட் 7 செயற்கைக்கோளால் கைப்பற்றப்பட்டது, அதே நேரத்தில் 2018ன் ஆண்டில் ஜனவரி 7ம் தேதி நிகழ்ந்த பனிப்பொழிவுவானது புகைப்படக் கலைஞர் பூச்செட்டாவால் கைப்பற்றப்பட்டது.
11/ 12
இருப்பினும் இதுபோன்ற திடீர் பனிப்பொழிவை அங்கு வாழும் மக்களால் சமாளிக்க முடியாத சூழல நிலவியது, மேலும் சாலைகள், கார்கள் மற்றும் பேருந்துகள் பனிக்கட்டியாக மாறியதால் ஏராளமான மக்கள் சாலைகளில் சிக்கித் தவித்ததாகவும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.