முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான சாலைப் பயணத்திற்கான டிப்ஸ் இதோ!

வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான சாலைப் பயணத்திற்கான டிப்ஸ் இதோ!

வழியில் உள்ள சுவாரஸ்யமான இடங்களைப் பார்வையிட மறக்காதீங்க. அதை பார்க்க தனியாக செல்ல நேரம் வருமா என்பது தெரியாது.

  • 19

    வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான சாலைப் பயணத்திற்கான டிப்ஸ் இதோ!

    புதிய இடங்களை ஆராயவும், இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை காணவும், மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கவும் சாலைப் பயணங்கள் சிறந்த வழியாகும். இந்த அனுபவங்கள் எல்லாம் வாழ்நாள் முழுக்க நினைவில் நிலைக்கும் வகையில் அமைய அந்த சாலை பயணங்கள் எந்த சிக்கலோ தடையோ இல்லாமல் வெற்றிகரமாக அமைய வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 29

    வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான சாலைப் பயணத்திற்கான டிப்ஸ் இதோ!

    அப்படி உங்கள் சாலை பயணங்கள் சரியாக பிளான் படி நடக்கவும், சரியாக முடியவும் தேவையான பொருட்களை பேக் செய்வது முதல் சாலையில் பாதுகாப்பாக இருப்பது வரை, அனைத்து தயாராக உதவும் சில அத்தியாவசிய உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

    MORE
    GALLERIES

  • 39

    வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான சாலைப் பயணத்திற்கான டிப்ஸ் இதோ!

    உங்கள் சாலை பயணத்தை வரைபடமாக்கி, நீங்கள் செல்ல விரும்பும் இடங்களில் உள்ள நிறுத்தங்கள், மாற்றுப்பாதைகளைக் கருத்தில் கொண்டு, உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள். இது நீங்கள் பாதையில் அடுத்து தொலைந்து போவதைத் தவிர்க்க உதவும். அது போலவே பயணிக்கும் வழியில் ஏதாவது இடர் ஏற்பட்டால் பதறாமல் மாற்று பாதையில் சென்று கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 49

    வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான சாலைப் பயணத்திற்கான டிப்ஸ் இதோ!

    உங்கள் பயணத்திற்கு கிளம்ப திட்டமிடும்போதே அதற்கு தேவையான சிற்றுண்டிகள், தண்ணீர், முதலுதவி பெட்டி மற்றும் வரைபடம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் பட்டியலை உருவாக்கவும். அதை வைத்து கிளம்பும் போது தேவையான பொருட்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 59

    வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான சாலைப் பயணத்திற்கான டிப்ஸ் இதோ!

    அதேபோல உங்கள் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு கூடுதல் சார்ஜர்களையும் பவர் பேங்குகளையும் எடுத்துக் கொள்ளவும். இது வழியில் எந்த தொந்தரவும் இல்லாமல் அதே நேரம் தகவல் தொடர்புகளில் இருந்து விலகாமல் பார்த்துக் கொள்ள உதவும்.

    MORE
    GALLERIES

  • 69

    வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான சாலைப் பயணத்திற்கான டிப்ஸ் இதோ!

    சாலை பயணத்தை தொடங்கும் முன், உங்கள் வாகனம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்ஜின் ஆயில், பிரேக் மற்றும் டயர்களைச் சரிபார்த்து, பதிவு மற்றும் காப்பீடு போன்ற தேவையான அனைத்து ஆவணங்களும் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

    MORE
    GALLERIES

  • 79

    வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான சாலைப் பயணத்திற்கான டிப்ஸ் இதோ!

    சாலைப் பயணங்கள் விலை உயர்ந்ததாக இருக்கும், எனவே பட்ஜெட்டை மனதில் வைத்திருப்பது அவசியம். எரிவாயு, உணவு, தங்குமிடம் மற்றும் நீங்கள் பார்வையிடத் திட்டமிடும் இடங்களின் அனுமதி கட்டணம், சாகச நடவடிக்கைகளின் கட்டணங்களை இணையத்தில் தேடி அதையும் கணக்கிட்டு கையில் எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு கூடுதல் பணத்தையும் எடுத்து செல்லவும். எல்லா இடங்களிலும் கார்டுகளை நம்பி இருக்க முடியாது.

    MORE
    GALLERIES

  • 89

    வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான சாலைப் பயணத்திற்கான டிப்ஸ் இதோ!

    சாலைப் பயணத்தின் போது உங்கள் கால்களுக்கு கொஞ்சம் ஓய்வு எடுக்கவும், கழிவறையைப் பயன்படுத்தவும், எரிபொருள் நிரப்பவும் வழக்கமான இடைவெளிகளை எடுப்பது முக்கியம். ஓய்வு நிறுத்தங்களை முன்கூட்டியே திட்டமிடுங்கள். மேலும் வழியில் உள்ள சுவாரஸ்யமான இடங்களைப் பார்வையிட மறக்காதீங்க. அதை பார்க்க தனியாக செல்ல நேரம் வருமா என்பது தெரியாது.

    MORE
    GALLERIES

  • 99

    வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான சாலைப் பயணத்திற்கான டிப்ஸ் இதோ!

    எப்போதும் உங்கள் சீட் பெல்ட்டை அணியுங்கள். போக்குவரத்து சட்டங்களை சரியாக கடைபிடியுங்கள். கவனத்தை சிதறாமல் வாகனம் ஓட்டுவதை உறுதி செய்யவும். கூடுதலாக, எதிர்பாராத சூழ்நிலையில், விளக்குகளை மாற்றவும், சின்ன இஞ்சின் கோளாறுகளை சரி செய்யவும் கற்றுக்கொளுங்கள்.

    MORE
    GALLERIES