பயணத்தின் போது வீட்டில் இருப்பது போல சுகமான சூழல் இருக்காது. அங்கே கிடைக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதே போல பயணத்தால் உடல் சூடு ஏற்படும், அஜீரணம் ஏற்படும். இப்படி பல காரணங்களால் வயிற்று வலி ஏற்படும். பயணத்தின் போது வயிற்று வலி வந்துவிட்டால் பயணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது. அது ஒரு பெரிய தொந்தரவாக இருக்கும் அதை பயத்தின்போதே சரி செய்ய சில டிப்ஸ் தருகிறோம்.
அஜீரணம் காரணமாக நீங்கள் வயிற்றுப் பிடிப்பு அல்லது இறுக்கத்தை அனுபவித்தால், இஞ்சி டீயைக் குடிங்க. அஜீரணம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளால் ஏற்படும் வலியைக் குறைக்க இஞ்சி பெரிய உதவியாக இருக்கும். கையில் இஞ்சி டீ சின்ன பேக்குகளை எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றாலும் சின்ன இஞ்சி துண்டு வாங்கி அதை வெந்நீரில் போட்டு குடித்துவிடுங்கள்.
பொதுவாக பயணத்தின் போது சோர்வாக இருந்தால், சோடா மற்றும் காபி போன்ற காஃபினேட்டட் பானங்கள்(caffeinated beverages) குடிப்பது வழக்கம். இது ஜீரணத்தை சரியாக பார்த்துக் கொள்ளும் என்று நினைப்போம்.ஆனால் அவை உண்மையில் அஜீரணத்தின் அறிகுறிகளை அதிகரிக்கலாம் மற்றும் வயிற்று வலியை மோசமாக்கலாம். வயிற்று வலியின் போது இவற்றை குடிக்காமல் இருப்பதே பெரிய மருந்தாக இருக்கும்.
மன அழுத்தம் செரிமான பிரச்சனைகளுக்கு பங்களிக்கும், எனவே உங்கள் பயணத்தின் போது சில நிமிடங்களை நீட்டி ஓய்வெடுப்பது உங்கள் வயிற்றில் நீங்கள் உணரக்கூடிய எந்த அசௌகரியத்தையும் குறைக்க உதவும். கூடுதல் போனஸுக்கு ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது யோகா போஸ்களை முயற்சிக்கவும். அதே போல மனதில் எதையும் போட்டு யோசிக்காமல் பயணியுங்கள்.