எல்லா எரிமலைகளும் எப்போதும் வெடித்துக்கொண்டே இருக்காது. ஒரு சில எரிமலைகள் அடிக்கடி வெடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். சில மலைகள் எரிமலை எனும் தன்மையை சில ஆண்டுகளில் இழந்து அமைதியாக மாறிவிடும். ஆனால் அதன் பின் வெடிக்கவே வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. உலகில் உள்ள சுற்றி பார்க்கக்கூடிய எரிமலையை பட்டியலிடுகிறோம். நேரம் கிடைக்கும் போது எரிமலைகள் எட்டி பார்த்து வாருங்கள்..
ஜப்பான் நாட்டின் மூன்றாவது பெரிய தீவான கியூஷு தீவின் மையத்தில் அமைந்துள்ள மவுண்ட் அசோ, உலகின் மிக பெரிய செயலில் உள்ள ஒரு கூட்டு எரிமலையாகும்.அது போக இந்த எரிமலையின் மேல் உள்ள பள்ளம் உலகின் மிகப்பெரியதாக கருதப்படுகிறது. இதன் விட்டம் மட்டும் 12 மைல்களாம். பெரியது மட்டும் அல்ல.. மிகவும் அழகானது என்றும் கூறப்படுகிறது.
புனித எலன்சு மலை அல்லது சென் ஹெலன்ஸ் மலை என்பது ஐக்கிய அமெரிக்காவில் வாஷிங்டனில் அமைந்துள்ள ஒரு தீவிர எரிமலையாகும். இந்த எரிமலையின் சிகரம் 8300 அடி உயரத்தில் உள்ளது. அதன் சிகரத்தில் குதிரைகால் வடிவ பள்ளம் ஒன்றும் உள்ளது, அதில் ஒரு எரிமலைக் குவிமாடம் மற்றும் ஒரு பனிப்பாறை உள்ளது. எரிமலையின் பாதையில் அழகான குகைகளும், அருவிகளும் கூட உள்ளன.
பனியின் இடையே நெருப்பு குழம்பு கொத்தித்து வழிந்தோடும் காட்சியை நினைத்துப் பாருங்கள். எதிர்மறைகள் இரண்டை ஒரே இடத்தில் வைத்தது போல இருக்கும் அல்லவா. அப்படியானது தான் எய்யாபியாட்லயாகுட் (eyjafjallajökull). உச்சரிக்க கொஞ்சம் கடினமாக இருக்கும் இந்த எரிமலை ஐஸ்லாந்தில் உள்ள சிறு பனியாறுகள் நடுவே அமைந்திருக்கிறது. எரிமலையின் உயரம் 1,666 மீ ஆகும். இந்த மலையை ஏறும்போது பனி, நீர், இடையே சாம்பலால் போர்த்திய படலங்களை காண நேரிடும்.
மயோன் எரிமலை / புல்கான் மயோன்/ மயோன் சிகரம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இது ஒரு துடிப்புடைய எரிமலை ஆகும். 1600 கலீல் இருந்து சுமார் 50 முறை வெடித்துள்ளது.இது பிலிப்பைன்சு நாட்டின் அல்பே மாகாணத்தில் அமைந்துள்ளது. இது "முழுமையான கூம்பு" எனப் புகழ்பெற்ற எரிமலையாகும். ஏனெனில் அது கிட்டத்தட்ட சமச்சீரான கூம்பு வடிவத்தில் உள்ளது
ஜப்பானின் புஜி எரிமலை ஒரு செயலில் உள்ள எரிமலை ஆகும். பொதுவாக "புஜி-சான்" என்று அழைக்கப்படும் இது 3,776 மீட்டர் உயரம் கொண்ட நாட்டின் மிக உயரமான சிகரமாகும். இது ஜப்பானின் 3 புனித மலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இந்த மலைக்கு மக்கள் புனித யாத்திரை செல்கின்றனர். மேலும் இந்த எரிமலை எடோ எனும் வரலாறு காலத்தை சேர்ந்த ஹொகுசாய் மற்றும் ஹிரோஷிஜின் காலை படைப்புகளை கொண்டுள்ளது.
கிலாயூயா என்பது ஹவாய் தீவுகளில் உள்ள, கேடைய எரிமலை வகை எரிமலை ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1277 மீ. உயரமானது. ஹவாய் மொழியில் கிலாயூயா என்பது நன்றாகப் பரவல் எனப் பொருள்படும். இது 1983 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருக்கிறது. உலகத்திலேயே அதிகம் வெடிக்கும் எரிமலையாக இது உள்ளது.அதேசமயம் மக்கள் எளிதாக ஆணுகக்கூடியதாகவும் உள்ளது.
அரினல் எரிமலை என்பது வடமேற்கு கோஸ்டாரிகாவில் உள்ள ஒரு செயலில் உள்ள ஆண்டிசிடிக் ஸ்ட்ராடோ வகை எரிமலை ஆகும். அடர் மழைக்காடுகளால் சூழப்பட்ட இந்த எரிமலை 2010 இல் இருந்து அமைதியாக இருக்கிறது. இருப்பினும் இந்த மலை உச்சிவரை ஏற அனுமதி இல்லை. அனால் அதன் அடிவாரத்தில் உள்ள காடுகள் கண்களை கொள்ளை கொள்ளும் அளவு அழகைக் கொண்டுள்ளன
எட்னா எரிமலை ஐரோப்பாவின் தென் இத்தாலியில் சிசிலித் தீவில் உள்ளது. ஜூன் 2013 இல் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. 4000 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக இந்த எரிமலை வெடிக்கத் தொடங்கியது. இதுவரை 90 முறை நெருப்புக்குழம்பை உமிழ்ந்துள்ளது. அதேநேரம் இந்த எரிமலை ஏறியவர்கள் எண்ணிக்கை என்பது அதிகமாக உள்ளது.