

திருமணத்திற்கு புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் காலம் மாறி, திருமணத்துக்கு முன் ஃபோட்டோ ஷூட் செய்வது டிரெண்டிங்காக உள்ளது. திருமண புகைப்படங்களைக் காட்டிலும் இந்தப் புகைப்படங்கள் மிகவும் சிறப்பாக வர வேண்டும் என்பதில் இளம் சந்ததியினர் மிகவும் சிரத்தை எடுத்துக்கொள்கின்றனர். அதற்காக, கடற்கரை, கோவில், இயற்கை எழில்கொஞ்சும் மலை பிரதேசங்கள், வயல் வெளிகள், நீரூற்றுகள் என அவர்களுக்கு பிடித்தமான இடங்களை தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் நீங்கள் ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ சூட் செய்ய திட்டமிட்டிருந்தால் இந்த 5 இடங்கள் சூப்பரான தேர்வாக இருக்கும்.


தாஜ் ஃபலக்னுமா அரண்மனை, ஹைதராபாத் (Taj Falaknuma Palace, Hyderabad) : பிரபலங்களின் திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ சூட் செய்யவதற்கு தேர்வு செய்யக்கூடிய இடங்களில் முதன்மையான இடத்தில் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் ஃபலக்னுமா அரண்மணை உள்ளது. ஆடம்பர ஹோட்டலான இது வசீகரிக்கும் கட்டடக் கலையைக் கொண்டுள்ளது. இருவரின் அன்பையும், ஸ்பரிசத்தையும் புகைப்படங்களாக மாற்ற விரும்பினால், இந்த இடம் அதற்கு சரியான தேர்வாக இருக்கும். இயற்கையான இடங்கள், லைட் செட்டிங் என எதைப்பற்றியும் கவலை கொள்ளத் தேவையில்லை. அனைத்து வசதிகளும் பிரம்மாண்ட ஹோட்டலில் உள்ளன. மேலும், சௌமஹல்லா அரண்மனை, வேதா நிலையம், ஜகதம்பா கோவில் உள்ளிட்ட இடங்களும் உள்ளன.


ஹுமாயூன் கல்லறை, டெல்லி (Humayun’s Tomb, Delhi) : முகலாய பேரரசைச் சேர்ந்த ஹூமாயூனின் கல்லறை திருமணத்திற்கு முந்தைய ஃபோட்டோ ஷூட்டிற்கு மிகவும் பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது. அழகிய பேக்கரவுண்ட் மற்றும் பசுமை புல்தரை தோட்டங்கள் உள்ளன. ஒரே மாதிரியான ஸ்டைலில் புகைப்படங்கள் இருக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்த இடம் ஏற்றதாக இருக்கும். வார நாட்களில் காலைப் பொழுதில் ஹூமாயூனின் கல்லறைக்கு சென்றால், அமைதியான முறையில் ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட்டை நிறைவு செய்யலாம். அப்போது பார்வையாளர்கள் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக இருக்கும்.


ருஷிகொண்டா கடற்கரை, விசாகப்பட்டினம் (Rushikonda Beach, Visakhapatnam) : கடற்கரை என்றவுடன் நம் மனதில் முதலில் தோன்றுவது கோவா கடற்கரை. இருப்பினும், அங்கு அதிகமான கூட்ட நெரிசல், பலரும் ஃபோட்டோ சூட் நடத்திய இடம் என்பதால், கோவா கடற்கரையில் புதுமையான சிலிர்க்கும் அளவிலான உணர்வுகள் இருக்காது. இதனால், வேறு எங்கு செல்வது என யோசித்தீர்கள் என்றால், விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா கடற்கரை நல்ல தேர்வு. அங்குள்ள வெள்ளை நிறத்திலான மணல், தெளிந்த வண்ணமயமான நீரில் கலர்புல்லான புகைப்படங்களை எடுக்கலாம். கூட்டம் இருக்காது, அமைதியான முறையில் மலரும் நினைவுகளாக உங்கள் புகைப்படத்தை எடுத்து வரலாம். மேலும், காந்தி விலங்கியல் பூங்கா, டென்னெட்டி பூங்கா ஆகியவை இருக்கின்றன.


பிரஞ்சு குவார்ட்டர், பாண்டிச்சேரி (French Quarter, Pondicherry) : இளம் ஜோடிகள் ப்ரீ வெட்டிங் ஷூட் செய்வதற்கு பொருத்தமான இடம் பிரெஞ்சு குவார்ட்டர். வெளிநாடுகளில் இருக்கும் வீதிகள் போன்ற அமைப்பு, காலணித்துவ ஸ்டைல் இங்கு உள்ளன. அங்கு சென்று நகர அமைப்பை பார்த்தால், நிச்சயம் ஃபோட்டோ ஷூட் நடத்தாமல் அங்கிருந்து நகரமாட்டீர்கள். வேறொரு இடம் வேண்டும் என விரும்பினால், பனா மீனா கா குண்ட் (Panna Meena Ka Kund) இடத்தை தேர்வு செய்யுங்கள். அந்த இடத்தை நீங்கள் எத்தனை முறை பார்வையிட்டாலும், உங்களை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே இருக்கும். 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த கட்டடத்தில் ராஜஸ்தானி ஆடைகளை அணிந்து கொண்டு இளவரசி போல் போஸ் கொடுங்கள். உங்களை நீங்களே மிகவும் ரசிப்பீர்கள். இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ சூட் நடத்த ஏற்ற இடங்களில் இதுவும் ஒன்று.