பயணம் என்று வரும்போது, பொதுவாக மக்கள் வெளிநாடு செல்ல அல்லது பெரிய நகரங்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள். கிராமத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் குறைவு. இருப்பினும், இந்தியாவில் உள்ள நகர இரைச்சல்களிலிருந்து தப்பித்து அமைதியான அதே நேரம் அழகான காட்சிகளை கொண்ட இடங்களை பார்க்க நினைப்பவர்களுக்கு இவை நிச்சயம் சரியான இடங்களாக இருக்கும்.
பிராக்பூர், இமாச்சலப் பிரதேசம் : இந்தியாவின் முதல் பாரம்பரிய கிராமம் பிராக்பூர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இந்த பாரம்பரிய கிராமம் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காங்க்ரா மாவட்டத்தின் ஜஸ்வான் அரச குடும்பத்தின் இளவரசி பிராக் என்பவரால் நிறுவப்பட்டது. பிரக்ராஜ் என்ற கிராமம் அவள் பெயரால் அழைக்கப்படுகிறது. அழகான கடைகள், கற்களால் ஆன தெருக்கள், கோட்டை போன்ற வீடுகளைக் காண உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு குவிகிறார்கள்.
கார்லி(Garli) :
ஹிமாச்சல பிரதேசத்தின் பிரக்பூரிலிருந்து செல்லக்கூடிய கார்லி கிராமத்தின் சிறப்பு அதன் இணைவு கட்டிடக்கலை ஆகும். கார்லியின் அழகிய ஹவேலிகள் ஒரு காலத்தில் பணக்கார வணிகர்களின் குடியிருப்புகளாக இருந்தன. இங்குள்ள கட்டிடக்கலையில் ஐரோப்பிய செல்வாக்கு காணப்படுகிறது. இங்குள்ள அரண்மனை புகழ்பெற்ற பாரம்பரிய ஹோட்டல்களில் ஒன்றாகும்.
கிசாமா,(Kisama) நாகாலாந்து :
நாகாலாந்தில் உள்ள கிசாமா கிராமத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரிய கிராமங்களில் இதுவும் ஒன்று. இந்த கிராமம் ஹார்ன்பில் திருவிழாவிற்கு பிரபலமானது. தலைநகர் கோஹிமாவில் இருந்து வெறும் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. டோட்டெம் கம்பங்கள் முதல் மொராங்ஸ் வரை அனைத்தையும் இங்கே காணலாம்.
காசி, மேகாலயா:
மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கிலிருந்து 25 கிமீ தொலைவில் மாவ்ப்லாங் காட்டுப்பகுதி அமைந்துள்ளது. அதற்கு அருகில் கிழக்கு இமயமலை பகுதியான காசி மலையில் பல தலைமுறைகளாக வாழும் பழங்குடி காசி இன மக்களின் பாரம்பரிய காசி கிராமம் அமைந்துள்ளது. அது பசும் போர்வை போர்த்திய அமைதியான கிராமம் ஆகும்.