காவிரி ஆறு கடலில் கலக்கும் இந்த இடம் தமிழ்நாட்டை ஆண்ட சோழ வம்சத்தின் தற்காலிக தலைநகராகவும் இது இருந்தது. கி.பி. 500 இல் ஏற்பட்ட சுனாமியால் பெரும்பாலான நகர பகுதி நீரில் அடித்துச்செல்லப்பட்டது. நீருள் மூழ்கியது. பின்னர் அகழ்வாராய்ச்சியில் முக்கியமான டெரகோட்டா சிலைகள் மற்றும் மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எலஞ்சி அல்லது இலஞ்சி மன்றம் பூம்புகாரில் உள்ள மற்றொரு அற்புதமான சுற்றுலாத் தலமாகும். சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய இளஞ்சி மன்றத்தில் ஒரு குளம் உள்ளது. அந்த குளத்து நீர், நோய்களைக் குணப்படுத்தும் அதிசய சக்திகளைக் கொண்டதாக காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காகவே மக்கள் பலர் இங்கே வருகின்றனர்.