வெளிநாட்டு பயணத்திற்கு புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்மற்றும் சரியான விசா பெறுவதை உறுதிசெய்யவும். அதோடு தங்குமிடம், பயண திட்டத்தையும் சரியாக தயார் செய்யவும். இலக்கு நாடுகளில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு வங்கிகள் வசூலிக்கும் வசதிக் கட்டணத்தைத் தவிர்க்க, அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் போதுமான உள்ளூர் நாணயத்தை வைத்திருக்கவும்.
நீங்கள் பார்வையிடும் நாடு அல்லது பிராந்தியத்தின் உள்ளூர் மொழியில் சில அடிப்படை வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை ஆன்லைனில் கற்றுக்கொள்வதன் மூலம், நீங்கள் அங்கு சந்திக்கும் உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும். பயணத்தின்போது மொழி பிரச்சனைகளை சமாளிக்கலாம். சரி முதல்முறை சர்வதேச பயணிகளுக்கு ஏற்ற இடங்களை பார்ப்போம்.
வெப்ப மண்டல காடுகள், தெளிந்த நீர் கொண்ட கடற்கரைகள் மத ஸ்தலங்கள், கொண்ட இந்த நாட்டில் பலவிதமான சுவையான உணவு வகைகளை, குறிப்பாக அனைத்து வகையான கடல் உணவுகளையும் ருசிக்கலாம். ஆடம்பரமான ஹோட்டல்களுக்குப் பதிலாக மலிவு விலையில் தங்கும் விடுதிகளில் தங்குவது உங்கள் ஒட்டுமொத்த பயணச் செலவைக் கணிசமாகக் குறைக்கும்.
இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் பெரிதும் ஒத்துப்போகும் நமது அண்டை நாடான இலங்கை மிகக் குறைந்த செலவில் சிறந்த சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது. பல உயிரியல் பூங்காக்கள் , மலைவாஸ்தலங்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைக் கொண்டிருப்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு நாடு மிகவும் பொருத்தமானது.
வணிக ரீதியாக இன்னும் பெரிய வளர்ச்சியடையாத காரணத்தால் சீஷெல்ஸ் தீவைப் பற்றி பலருக்கு தெரியாது. இது மேற்கு இந்தியப் பெருங்கடலில் சுமார் 115 தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடாகும். இந்திய எல்லைக்கு அருகிலேயே இருக்கும் இந்த நாட்டில் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அற்புதமான கடற்கரைகள் பல உள்ளன. இந்த நாட்டிற்கு விடுமுறை ட்ரிப் போய் வர ரூ.50,000 - ரூ.60,000க்கு மேல் செலவாகாது.
தெசலோனிகி(Thessaloniki) கிரேக்கத்தில் உள்ள மலிவான இடங்களில் ஒன்றாகும். குறிப்பாக உணவு விஷயத்தில். யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற, பல நூற்றாண்டுகள் பழமையான மோடியானோ உணவு சந்தை உட்பட, இங்கு பயணம் செய்ய போதுமான காரணங்கள் உள்ளன. நகர மையத்தை அதன் சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் மெட்ரோ பாதை நவம்பர் 2023 க்குள் திறக்கப்படும்.