முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » லாக்டவுனிற்குப் பின் பயணம் செல்ல திட்டமா..? கோவா சென்று வாருங்கள்..மழைக்காலத்தில் சொர்க பூமியாக இருக்கும்..!

லாக்டவுனிற்குப் பின் பயணம் செல்ல திட்டமா..? கோவா சென்று வாருங்கள்..மழைக்காலத்தில் சொர்க பூமியாக இருக்கும்..!

இந்த நேரத்தில், வெயில் குறைவாகவும், சாரல் மழையுடனும் வானிலை இனிமையாக இருக்கும். எனவே இந்த மாதங்களில் நீங்கள் கோவா சென்றால் ஒரு புதுவித அனுபவம் கிடைக்கும்.

 • 110

  லாக்டவுனிற்குப் பின் பயணம் செல்ல திட்டமா..? கோவா சென்று வாருங்கள்..மழைக்காலத்தில் சொர்க பூமியாக இருக்கும்..!

  கோவா என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் என்பது நம் அனைவருக்குமே தெரியும். சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் நாடாக கோவா இருப்பதால் வருடம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், கொண்டாட்டமுமாக இருக்கும். ஒருவேளை கோவா சென்றால் மழைக்காலத்தை தேர்ந்தெடுத்து செல்வது நல்லது. ஏன் மழைக்காலத்தில் செல்ல வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். Image Credit : Sebastian Gora Photo / Shutterstock.com

  MORE
  GALLERIES

 • 210

  லாக்டவுனிற்குப் பின் பயணம் செல்ல திட்டமா..? கோவா சென்று வாருங்கள்..மழைக்காலத்தில் சொர்க பூமியாக இருக்கும்..!

  வானிலை : கோவா மாநிலம் இந்தியாவில் உள்ள மேற்குக் கடற்கரை பகுதியிலுள்ள கொங்கன் மண்டலத்தில் அமைந்துள்ளது. கோவாவில் பருவமழை ஜூன் நடுப்பகுதியில் இருந்து அக்டோபர் வரை நீடிக்கும். இந்த நேரத்தில், வெயில் குறைவாகவும், சாரல் மழையுடனும் வானிலை இனிமையாக இருக்கும். எனவே இந்த மாதங்களில் நீங்கள் கோவா சென்றால் ஒரு புதுவித அனுபவம் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 310

  லாக்டவுனிற்குப் பின் பயணம் செல்ல திட்டமா..? கோவா சென்று வாருங்கள்..மழைக்காலத்தில் சொர்க பூமியாக இருக்கும்..!

  தூத்சாகர் நீர்வீழ்ச்சி : தூத்சாகர் நீர்வீழ்ச்சி கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைக்கு அருகில் பனாஜியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தூத்சாகர் அருவி, மண்டோவி ஆற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளதால் மழைக் காலங்களில் இந்தியாவின் அதிக நீர்வரத்து அருவிகளில் ஒன்றாக மாறுகிறது. 310 மீட்டர் உயரம் கொண்ட இது இந்தியாவின் ஐந்தாவது உயரமான அருவியாக உள்ளது. அழகிய துத்ஸாகர் நீர்வீழ்ச்சியின் மகிமையைக காண மழைக்காலம் சிறந்த நேரம். இந்த அருவியை மேம்பாலத்தில் கடந்து செல்லும் ரயில் பிரமிக்க வைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 410

  லாக்டவுனிற்குப் பின் பயணம் செல்ல திட்டமா..? கோவா சென்று வாருங்கள்..மழைக்காலத்தில் சொர்க பூமியாக இருக்கும்..!

  பசுமையான பகுதிகள் : கோவா தன் புவிப்பரப்பில் 33க்கும் மேற்பட்ட பகுதியில் அரசாங்க காடுகளைக் கொண்டுள்ளது. அதில் கணிசமான நிலப்பரப்பில் தனியாருக்குச் சொந்தமான காடுகள் மற்றும் முந்திரி, மாமரம், தென்னை மரங்கள் அடங்கிய பரந்த நிலப்பரப்பும் உள்ளது. இதனால் கோவாவில் பெரும்பாலான பகுதிகள் பசுமையாக காணப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் அனைத்து ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளன. இந்த நேரத்தில் நீங்கள் கோவாவின் அழகை முழுமையாக ரசிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 510

  லாக்டவுனிற்குப் பின் பயணம் செல்ல திட்டமா..? கோவா சென்று வாருங்கள்..மழைக்காலத்தில் சொர்க பூமியாக இருக்கும்..!

  சரணாலயங்கள் : கோவா நகரத்தில் ஏறத்தாழ 62% பகுதிகள் வனவிலங்கு சரணாலயங்கள் ஆகும். கோவா மாநிலத்தின் போண்டிலா வனவிலங்கு சரணாலயம், மொலம் வனவிலங்கு சரணாலயம், கோட்டிகோ வனவிலங்கு சரணாலயம், மேடி வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. மேலும், சோரோ தீவில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் உள்ளது. இவைகள் அனைத்தும் மழைக்காலத்தில் ஒரு குளிர்ச்சியான உணர்வை உங்களுக்கு தரும். பசுமை நிறைந்த சரணாலயங்களில் விலங்குகளை ரசித்து மகிழலாம்.

  MORE
  GALLERIES

 • 610

  லாக்டவுனிற்குப் பின் பயணம் செல்ல திட்டமா..? கோவா சென்று வாருங்கள்..மழைக்காலத்தில் சொர்க பூமியாக இருக்கும்..!

  விலை மலிவு : கோவாவிற்கு பருவமழை காலத்தில் அனைத்து கட்டணங்களும் விலை மலிவாக இருக்கும். ஹோட்டல் அறைகளின் விலைகள் 50 சதவீதம் வரை குறைக்கப்படுகின்றன. இதனால் குறைவான பட்ஜெட்டில் கோவா செல்ல விரும்புவர்கள் இந்த நேரத்தை தேர்வு செய்து சென்று வரலாம்.  Image Credit : saiko3p / Shutterstock.com

  MORE
  GALLERIES

 • 710

  லாக்டவுனிற்குப் பின் பயணம் செல்ல திட்டமா..? கோவா சென்று வாருங்கள்..மழைக்காலத்தில் சொர்க பூமியாக இருக்கும்..!

  நெல் நடவு : கோவாவின் பெரும்பகுதி மண்ணானது இரும்பு, அலுமினியம் கலந்த கூட்டுப்பொருளால் ஆன சிவந்த நிறமுடைய களிமண்ணாகும். எஞ்சியுள்ள நிலப்பகுதி மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகளில் பெரும்பாலும் வண்டல்மண் மற்றும் செம்மண் ஆகியவை உள்ள. இங்கு நெல் நடவு உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகள் நடைபெறுகிறது. குறிப்பாக மழைக்காலம் அதிகளவு நெல் நடவு பருவமாகும். நூற்றுக்கணக்கான விவசாயிகள் நெல் மணிகளை நடவு செய்வதை நீங்கள் கண்டுகளிக்கலாம். Image Credit : Lloyd Vas / Shutterstock.com

  MORE
  GALLERIES

 • 810

  லாக்டவுனிற்குப் பின் பயணம் செல்ல திட்டமா..? கோவா சென்று வாருங்கள்..மழைக்காலத்தில் சொர்க பூமியாக இருக்கும்..!

  சாதனை விளையாட்டு : கோவாவில் மலையேற்றம், நடைபயணம் மற்றும் தண்ணீர் ராஃப்டிங் உள்ளிட்ட பல சாகச விளையாட்டுகளை அனுபவிக்க முடியும். குறிப்பாக பல்வேறு நீர் சார்ந்த விளையாட்டுகள் உங்களை குதூகலப்படுத்தும்.  Image Credit : Pranay Chandra Singh / Shutterstock.com

  MORE
  GALLERIES

 • 910

  லாக்டவுனிற்குப் பின் பயணம் செல்ல திட்டமா..? கோவா சென்று வாருங்கள்..மழைக்காலத்தில் சொர்க பூமியாக இருக்கும்..!

  இரவு வாழ்க்கை : கோவாவின் அழகே இரவு நேரத்தில் தான் தெரியும் எனலாம். இரவு நேரத்தில் இருக்கும் வண்ண விளக்குகள், கடற்கரை காட்சிகள் மிகவும் ரசிக்கும் வகையில் இருக்கும். குறிப்பாக மழைக்காலங்களில், பல இரவு விடுதிகள் திறந்திருக்கும். அங்கு வேடிக்கையான விருந்துகள் மற்றும் நடனங்களை என களைகட்டும். அதேபோல மழைக்காலத்தில் பல்வேறு திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 1010

  லாக்டவுனிற்குப் பின் பயணம் செல்ல திட்டமா..? கோவா சென்று வாருங்கள்..மழைக்காலத்தில் சொர்க பூமியாக இருக்கும்..!

  குறைந்த சுற்றுலா பயணிகள் : மழைக்காலங்களில் கோவாவுக்கு வருவது பற்றி ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால், கூட்டம் குறைவாக இருக்கும். மழை விழுவதால் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து இந்நகரம் விடுபட்டுள்ளது. கடற்கரைகள் மிகவும் காலியாகவும், அமைதியாகவும் இருக்கும். எனவே நீங்கள் முழுமையாக உங்கள் விடுமுறை நாட்களை கொண்டாடி மகிழ முடியும். Image Credit : Lloyd Vas / Shutterstock.com

  MORE
  GALLERIES