"கோடை காலம்" வந்தால் தான் நாமத்தில் பலருக்கும் "விடுமுறை காலமே" வருகிறது. எப்போது சம்மர் ஹாலிடேஸ் கிடைக்கும் எங்கே செல்லலாம் என்கிற திட்டம் கிட்டத்தட்ட நம் அனைவரின் மனதிற்குள்ளும் ஓடிக்கொண்டே தான் இருக்கும். அப்படியாக இந்த கோடை காலத்திலும் நீண்ட விடுமுறைக்கு நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள், ஆனால் கொளுத்தும் வெயிலை பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். வழக்கமான (கோடை காலத்தில் எந்தெந்த ஊரக்ளுக்கு செல்லலாம்?) கட்டுரைகளை போல இல்லாமல், இது கோடை காலத்தில் நீங்கள் செல்ல கூடாத 5 சுற்றுலா தளங்களை பட்டியலிடுகிறது.
'டிராவல்' என்று வரும் போது 'ஹீட்' ஹான் உங்களின் 'டீல் பிரேக்கர்' என்றால், நீங்கள் மலை வாசஸ்தலங்கள் மற்றும் பிற குளிர்ச்சியான பகுதிகளுக்கு பயணிக்க வேண்டும் என்பது ஒருபக்கம் இருங்க கீழே பட்டியலிடப்பட்டுள்ள 5 இடங்களை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்கவும். இந்த 5 ஊர்களும் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்கள் என்றாலும் கூட, கோடை காலத்தில் அங்கே நிலவும் கடுமையான வெப்பம் உங்களின் மொத்த பிளானையும் சுட்டெரித்து விடும் என்பதால் இந்த கோடையில் இந்த இடங்களைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம்!
1. சென்னை : சென்னை கடற்கரையில் அமைந்துள்ளது, இது நகரத்தின் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலைக்கு பங்களிக்கிறது. வெப்பமான வானிலைக்கு பழக்கமில்லாத நபர்களுக்கு சென்னை ஒரு "அதிர்ச்சியாக" இருக்கலாம். சென்னை அழகான கடற்கரைகள் கொண்ட ஒரு பெரிய நகரம் தான் ஆனாலும் நீங்கள் கோடைகாலத்தை என்ஜாய் செய்ய விரும்பினால் - தனிப்பட்ட பயணமாக இருந்தாலும் சரி, பேமிலி ட்ரிப் ஆக இருந்தாலும் சரி - சென்னைக்கு செல்ல திட்டமிட்டால், முடிந்தால் உங்கள் பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்.
2. ஜெய்சால்மர் : இந்தியாவின் கோல்டன் சிட்டி ஆன ஜெய்சல்மேர், ராஜஸ்தானில் உள்ள ஒரு அழகான பகுதி ஆகும். கோடை காலத்தில், மணல் திட்டுகளுக்கு பெயர் பெற்ற ஜெய்சால்மரில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டும். எனவே, நீங்கள் கோடை வெயிலுக்கு பயந்தவராக இருந்தால் ஜெய்சல்மேரைத் தவிர்க்க வேண்டும். ஜெய்ப்பூருக்கும் இதே நிலைமை தான். கோடை காலத்தில் ஜெய்ப்பூர் ஆனது மிகவும் வெப்பமாகவும் வறண்டதாகவும் இருக்கும். பாலைவனத்தில் அமைந்துள்ளதால், கோடை முழுவதும் இந்த இடங்கள் தாங்க முடியாத வெப்பத்தை உமிழும்!
3. கோவா : கோவாவின் கோடைக்காலமும் கடுமையாகவே இருக்கும், அங்கே வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை எட்டும். இது ஒரு கடலோர மாநிலம் என்பதால் இங்கே ஈரப்பதம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். குளிர்ச்சியான பிரதேசங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இது சங்கடமானதாக இருக்கலாம் மற்றும் கோவாவின் வெப்பத்தை பழகுவதற்கு சிறிது நேரம் ஆகலாம். கோவாவின் கடற்கரைகள் அனைத்துமே நம்மை பிரமிக்க வைக்கும் என்றாலும் மறுபுறம், கோவாவில் கோடையில் கடுமையான வெப்பம் நிலவும் என்பதால் சிலருக்கு இந்த ட்ரிப் சரி வராமல் போகலாம். சூரிய ஒளியின் வெப்பத்தை சகிக்கும் அளவிற்கு உங்களுக்கு திறன் இல்லை என்றால் இங்கே பகல் நேரங்களில் கடற்கரையில் நடப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
4. குஜராத் : குஜராத்தின் வெப்பநிலை கோடை மற்றும் குளிர்காலம் ஆகிய இரண்டிலும் "கடுமையாகவே" இருக்கும், கோடையில் சூடாகவும், குளிர்காலத்தில் உறைபனியாகவும் இருக்கும். இந்த இடத்தின் கோடை காலம் மார்ச் முதல் மே வரை நீடிக்கும். அந்த நேரத்தில் இங்கே வானிலை மிகவும் வறண்டதாக மாறும்! இதன் விளைவாக, கோடை மாதங்கள் முழுவதும் குஜராத்தைத் தவிர்ப்பது நல்லது.