முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » தாஜ்மஹால் முதல் லடாக் வரை.. ஆப்டிகல் இல்யூஷனாக காட்சியளிக்கும் இந்த இடங்களை பற்றி தெரியுமா..?

தாஜ்மஹால் முதல் லடாக் வரை.. ஆப்டிகல் இல்யூஷனாக காட்சியளிக்கும் இந்த இடங்களை பற்றி தெரியுமா..?

இயற்கையாக நிகழ்வதை விட சற்று மாறுபட்டு நடக்கிறதே என்று தோன்றும் ஆனால் அவை எல்லாம் காட்சி மாயை.

  • 16

    தாஜ்மஹால் முதல் லடாக் வரை.. ஆப்டிகல் இல்யூஷனாக காட்சியளிக்கும் இந்த இடங்களை பற்றி தெரியுமா..?

    பயணத்தை சுவாரஸ்யமாக்குவதே அந்த இடத்தில் உள்ள கதைகளும் அனுபவங்களும் தான். அதில் ஒரு வகை தான் ஆப்டிகல் இல்லுஷன் என்று சொல்லப்படும் காட்சி மாயை. காட்சி மாயைகள் கொண்ட புகழ்பெற்ற இந்தியாவின் சில சிறந்த இடங்களை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்

    MORE
    GALLERIES

  • 26

    தாஜ்மஹால் முதல் லடாக் வரை.. ஆப்டிகல் இல்யூஷனாக காட்சியளிக்கும் இந்த இடங்களை பற்றி தெரியுமா..?

    இமாலய பகுதியான லேவில் அமைந்துள்ள காந்தமலை ஆப்டிகல் மாயையை நீங்கள் காணக்கூடிய சிறந்த இடங்களில் ஒன்றாகும். வாகனங்களின் இன்ஜின்கள் செயலிழந்து நின்றாலும் மலையில் தானாக பயணிப்பது போல் தெரியும். உண்மையில், மலையின் நிலம் ஒரு ஒளியியல் மாயையை உருவாக்குகிறது, இது கீழ்நோக்கி சரிவை ஒரு மேல்நோக்கி சாய்வாகக் காட்டுகிறது. இதனால், வாகனங்கள் கீழ்நோக்கி சென்றாலும், மேலே செல்வது போல் தெரிகிறது.

    MORE
    GALLERIES

  • 36

    தாஜ்மஹால் முதல் லடாக் வரை.. ஆப்டிகல் இல்யூஷனாக காட்சியளிக்கும் இந்த இடங்களை பற்றி தெரியுமா..?

    மகாராஷ்டிராவில் அமைந்துள்ள கவல்ஷெட் பாயிண்ட் ஒரு தனித்துவமான தலைகீழ் நீர்வீழ்ச்சியை காணும் வாய்ப்பைத் தருகிறது. இந்த காடுகளின் இடையே வீசும் காற்று வெளியில் போக வழி இல்லாமல் தண்ணீரை மேலே தள்ளுவதால் புவி ஈர்ப்புக்கு எதிராக செயல்படுவதை போலத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது, இது அற்புதமான ஒளியியல் மாயையை உருவாக்குகிறது

    MORE
    GALLERIES

  • 46

    தாஜ்மஹால் முதல் லடாக் வரை.. ஆப்டிகல் இல்யூஷனாக காட்சியளிக்கும் இந்த இடங்களை பற்றி தெரியுமா..?

    உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் கூட காட்சி மாயம் நிறைந்துள்ளது. பொதுவாக ஒரு பொருளை தூரத்தில் இருந்து பார்த்தால் சிறிதாக தெரியும். அதேநேரம் அருகில் செல்லும்போது பெரிதாகும். ஆனால், தாஜ்மஹால் வாயிலில் நுழையும் போது, மஹால் பெரியதாகத் தோன்றும். நீங்கள் கட்டிடத்தை நோக்கி நகரும்போது, ​​​​அது சுருங்குவது போல் தெரிகிறது.

    MORE
    GALLERIES

  • 56

    தாஜ்மஹால் முதல் லடாக் வரை.. ஆப்டிகல் இல்யூஷனாக காட்சியளிக்கும் இந்த இடங்களை பற்றி தெரியுமா..?

    குஜராத் ஜூனாகத் மற்றும் அம்ரேலி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ள துளசிஷ்யம் பழமையான கிருஷ்ணர் கோயிலுக்கும் வெந்நீர் ஊற்றுகளுக்கும் பெயர் பெற்றது. இந்த இடம் காந்த மலை போன்ற நிகழ்வுகளையும் கொண்டுள்ளது. ஒரு கார் கீழ்நோக்கி நகரும் போது, ​​வாகனம் மேலே நகர்வதை போல காணப்படுகிறது. அமைந்துள்ள மலைகள் தான் காரணமாக இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 66

    தாஜ்மஹால் முதல் லடாக் வரை.. ஆப்டிகல் இல்யூஷனாக காட்சியளிக்கும் இந்த இடங்களை பற்றி தெரியுமா..?

    உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாரா இமாம்பரா அதன் சிக்கலான கட்டிடக்கலைக்காக பூல் புலையா என்று அழைக்கப்படுகிறது. இந்த கட்டிடத்தின் உள்ளே அமைந்துள்ள ஒரு தொட்டியில் அமைந்துள்ள தண்ணீரில் பிரதான சாலையின் பிரதிபலிப்பைக் காணலாம். அதற்கு காரணம் அந்த தொட்டி 45 டிகிரி சரிவாக காணப்படுகிறது. அதனால் தான் பிரதிபலிப்பு தெரிகிறது.

    MORE
    GALLERIES