பயணங்கள் எப்போதும் இடங்கள் சார்ந்ததாகவே இருந்துவிடாது. இடங்களைத் தாண்டி புதிய கலாச்சாரம், புதிய மக்கள் , புதிய உணவு கலாச்சாரத்தை நமக்கு சொல்லித்தருவதாக பயணங்கள் அமையும். போகும் இடங்களில் எல்லாம் புதிய உணவுகளை ருசிப்பது சுவாரசியமானது. அதே போல சில இடங்கள் உணவுக்காகவே பயணிக்க வொர்த்தானது. அப்படி உனக்காக பயணிக்கக்கூடிய இடங்களை உங்களுக்கு சொல்கிறோம்.
இந்தியாவின் இமாசலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலாவின் ஒரு புறநகர்ப் பகுதி மேக்லியாட் கஞ்ச். இது பாரம்பரிய திபெத்திய உணவுகளான துக்பா மற்றும் மோமோஸ் முதல் மர அடுப்புகளில் செய்யப்படும் பீட்ஸாக்கள் வரை அனைத்தையும் ருசிக்கலாம். சுவையான உணவுடன் தௌலாதர் மலைத்தொடரின் அழகையும் ரசிக்கலாம்.
தென்னிந்தியாவின் அனைத்து உணவு வகைகளையும் ஒரே இடத்தில் சாப்பிட விரும்பினால், உடுப்பி தான் சரியான இடம். அரிசி, பருப்பு என்று வகை வகையான மாவுகளில் சுடப்படும் நூற்றுக்கணக்கான கொங்கனி வகை தோசைகளை இங்கு மிஸ் செய்துவிடக்கூடாது. மேலும் இந்த சிறப்பு உணவு பிரியர்களுக்கு இது ஒரு தவிர்க்க முடியாத இடமாக இருக்கிறது.
அதேபோல கேரளா உணவுகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அப்பம், புட்டு- கடலக்கறி, இடியாப்பம் இங்கு மிகவும் பிரபலமானவை. இங்குள்ள அசைவ உணவுகள் கரிமீன் பொலிச்சது, மீன் மாங்கா கறி, கோஜி பொரிச்சது எல்லாம் நிச்சயம் ட்ரை பண்ண வேண்டியது. இது தவிர பத்திரி, எரிச்சேரி, ஓலன், உள்ளி தேய்த்தல், வெள்ளரிக்காய் கிச்சடி போன்ற சைவ உணவுகளும் பலா பாயசம், சட்டி பத்திரி, அடப்ரதமன் போன்ற சில சுவையான இனிப்பு வகைகளை சுவைப்பதற்காகவே கண்டிப்பாக கேரளாவுக்குச் செல்லலாம்.