முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வெயிலில் இருந்து தப்பிக்க நிலத்திற்கு அடியில் வாழும் நகர மக்கள்... எங்கே தெரியுமா?

வெயிலில் இருந்து தப்பிக்க நிலத்திற்கு அடியில் வாழும் நகர மக்கள்... எங்கே தெரியுமா?

குடிபெயர்ந்த போது இங்குள்ள வறண்ட நிலத்தில் வெப்பத்தில் வாழ முடியாத காரணத்தால் இங்குள்ள நிலத்தின் அடியில் மண்ணை தோண்டி மக்கள் வாழத் தொடங்கினர்.

 • 18

  வெயிலில் இருந்து தப்பிக்க நிலத்திற்கு அடியில் வாழும் நகர மக்கள்... எங்கே தெரியுமா?

  பதுங்கு குழிகள், ரகசிய அறைகள், சுரங்க பாதைகள், நிலத்தடி அறைகள் எல்லாம் வரலாற்று புத்தகங்களிக்கும் ராகுவை தளவாட செய்திகளிலும் கேட்டிருப்போம். போர் அல்லது ஆபத்து என்று வரும்போது ராஜாக்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த நிலத்தடி பாதைகளிலோ, அறைகளிலோ தங்குவார்கள். ஆனால் ஒரு தென்னாபிரிக்க நகரமே நிலத்திற்குள் தான் இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 28

  வெயிலில் இருந்து தப்பிக்க நிலத்திற்கு அடியில் வாழும் நகர மக்கள்... எங்கே தெரியுமா?

  வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அரபு மொழி பேசும் பெர்பர் இந மக்கள் வாழும் சிறிய நகரம் ஒன்று உள்ளது. அதற்கு மட்மதா (matmata) என்று பெயர். தெற்கு துனிசியாவின் டிஜெபல் தஹார் பிராந்தியத்தின் வறண்ட பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள நிலப்பரப்பில் இந்த நகரம் அமைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 38

  வெயிலில் இருந்து தப்பிக்க நிலத்திற்கு அடியில் வாழும் நகர மக்கள்... எங்கே தெரியுமா?

  ஒவ்வொரு ஸ்டார் வார்ஸ்( star wars ) ரசிகருக்கும் லூக் ஸ்கைவால்கரின்(Luke Skywalker) வீட்டின் இருப்பிடம் பற்றி கொஞ்சம் தெரியும். அந்த இருப்பிடங்கள் எல்லாம் இந்த துனிசியாவின்  மட்மதா நகரத்தில் தான் படப்பிடிப்பு செய்யப்பட்டது. ஆனால் இப்போது இந்த பாரம்பரிய கட்டமைப்புகள் கொண்ட நகரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேறுவதால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 48

  வெயிலில் இருந்து தப்பிக்க நிலத்திற்கு அடியில் வாழும் நகர மக்கள்... எங்கே தெரியுமா?

  பெர்பர் இன மக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். அவர்கள் அரேபியாவில் இருந்து துனிசியா நாட்டிற்கு குடிபெயர்ந்த போது மட்மதாவில் உள்ள வறண்ட நிலத்தில் வெப்பத்தில் வாழ முடியாத காரணத்தால் இங்குள்ள நிலத்தின் அடியில் மண்ணை தோண்டி மக்கள் வாழத் தொடங்கினர்.

  MORE
  GALLERIES

 • 58

  வெயிலில் இருந்து தப்பிக்க நிலத்திற்கு அடியில் வாழும் நகர மக்கள்... எங்கே தெரியுமா?

  எளிய கைக்கருவிகளுடன் தோண்டக்கூடிய அளவுக்கு மென்மையாக இருக்கும் மணற்கல்லில் முதலில் ஆழமான வட்டக் குழியைத் தோண்டி வீடுகள் கட்டுகின்றனர். குகையின் விளிம்புகளைச் சுற்றி தோண்டப்பட்டு, நிலத்தடி அறைகளை உருவாக்கி வீட்டின் அமைப்பை கொண்டு வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 68

  வெயிலில் இருந்து தப்பிக்க நிலத்திற்கு அடியில் வாழும் நகர மக்கள்... எங்கே தெரியுமா?

  இந்த தனித்துவமான ட்ரோக்ளோடைட்(troglodyte) கட்டுமானமானது பகலில்  வெப்பத்திலிருந்து தப்பிக்க  உதவியுள்ளது . ஆனால் 1960 களில் பெய்த கனமழை, வெள்ளத்தில் நிலத்தடி குடியிருப்புகள் கொஞ்சம் சேதமடைந்துள்ளது . இருப்பினும் இன்றைய சூழலில் இந்த வீடுகள் அனைத்து நவீன  வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 78

  வெயிலில் இருந்து தப்பிக்க நிலத்திற்கு அடியில் வாழும் நகர மக்கள்... எங்கே தெரியுமா?

  இந்த வீட்டில் ஒவ்வொரு கொல்லைப்புறமும் ஒரு முற்றத்துடன் இணைகிறது. நிலத்தடி வீட்டிற்கு இந்த முற்றம் மிக முக்கியமானது. ஏனெனில் அது தான் இந்த வீட்டிற்கு வெளியில் இருந்து காற்றைக் கொண்டுவருகிறது. குடும்ப உறுப்பினர்கள் வேலைகளைச் செய்வதற்கும் சமூக ரீதியாக இணைவதற்கும் இது ஒரு மைய இடமாக விளங்கிகிறது.

  MORE
  GALLERIES

 • 88

  வெயிலில் இருந்து தப்பிக்க நிலத்திற்கு அடியில் வாழும் நகர மக்கள்... எங்கே தெரியுமா?

  மட்மதா சுரங்க வீடுகளில் இருந்து சுவரில் பாதிக்கப்பட்ட கால் வைக்க படி போன்ற அமைப்பை கொண்டு தாவி நிலப்பரப்பை அடைகின்றனர். துனிசியா ஜனாதிபதி ஹபீப் போர்குய்பா நாட்டை நவீனமயமாக்க முயன்ற போது இந்த நகரமும் அங்குள்ள பெர்பர் மக்களும் பல புதிய வசதிகளை பெற்றனர்.

  MORE
  GALLERIES