முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » One-day trip : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை... ஐதராபாத்தில் பார்க்க வேண்டிய விஷயங்கள்..!

One-day trip : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை... ஐதராபாத்தில் பார்க்க வேண்டிய விஷயங்கள்..!

சார்மினார் சுற்றி முத்துக்கள், பழமையான நிசாம் நாட்டின் சிறப்பம்சமாக குந்தன் நகைகளை வாங்கலாம்.

 • 110

  One-day trip : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை... ஐதராபாத்தில் பார்க்க வேண்டிய விஷயங்கள்..!

  ஒரு நாள் சுற்றுலா திட்டங்கள் எல்லாம்  பிரபலமாகி வருகின்றன. காலையில் தொடங்கி மாலை முடியும் நேரத்திற்கு என்னென்ன இடங்களை பார்க்கலாம் என்று திட்டம் போடத் தொடங்கிவிட்டார்கள். அப்படி இந்தியாவின் முக்கிய நகரங்களில்  ஒரு நாளில்  என்ன செய்யலாம் என்று சொல்ல இருக்கிறோம்.

  MORE
  GALLERIES

 • 210

  One-day trip : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை... ஐதராபாத்தில் பார்க்க வேண்டிய விஷயங்கள்..!

  அந்த வரிசையில் இன்று தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் என்ன செய்யலாம் என்று சொல்கிறோம். ஐதராபாத்தில்ஒரு நாளைக் கழிக்க பல வழிகள் உள்ளன. எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையா? இப்போ தெரிஞ்சுக்கோங்க..

  MORE
  GALLERIES

 • 310

  One-day trip : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை... ஐதராபாத்தில் பார்க்க வேண்டிய விஷயங்கள்..!

  ஹைதராபாத் என்று சொன்னதும் நான்கு மினார் என்று சொல்லப்படும் கோபுரங்களை கொண்ட ஒரு கட்டிடம் தான் நினைவுக்கு வரும். நான்கு மினார்கள் கொண்டதால் சார்மினார் என்று அழைக்கப்படுகிறது. 1591 இல் முகமது குலி குதுப் ஷாவால் கட்டப்பட்ட மசூதியான இதை சுற்றி முத்துக்கள், பழமையான நிசாம் நாட்டின் சிறப்பம்சமாக குந்தன் நகைகளை வாங்கலாம்.

  MORE
  GALLERIES

 • 410

  One-day trip : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை... ஐதராபாத்தில் பார்க்க வேண்டிய விஷயங்கள்..!

  இப்ராஹிம் பாகில் சுல்தான் அப்துல்லா குதுப் ஷாவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தாராமதி பரதாரி என்ற மண்டபம் உள்ளது. இந்த இடம்  முன்னொரு காலத்தில் நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளுக்கான இடமாக இருந்தது. இன்று, இஸ்லாமிய கலை தாக்கங்கள் கொண்ட அழகான கட்டிடக்கலை மட்டுமே உள்ளது. அதை நிச்சயம் பார்வையிடுங்கள்

  MORE
  GALLERIES

 • 510

  One-day trip : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை... ஐதராபாத்தில் பார்க்க வேண்டிய விஷயங்கள்..!

  பிரிட்டிஷ் ரெசிடென்சி..
  கிழக்கிந்திய கம்பெனியின் இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ பிரதிநிதியான ஜேம்ஸ் அகில்லெஸ் கிர்க்பாட்ரிக் என்பவரின் வசிப்பிடமாக இருந்தது பிரிட்டிஷ் ரெசிடென்சி ஆகும். அன்றைய காலனிய பாணி கட்டிடக் கலைகளையும் பொருட்களையும் பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 610

  One-day trip : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை... ஐதராபாத்தில் பார்க்க வேண்டிய விஷயங்கள்..!

  பிர்லா மந்திர்
  பிர்லா மந்திர் என்பது ஐதராபாத்தில் அமைந்துள்ள, வெள்ளைச் சலவைக்கல்லினால் ஆன, வெங்கடாசலபதி ஆலயமாகும். இது உசைன்சாகர் ஏரியின் தென்கரையில் உள்ள சிறு குன்றின் மேல் எழுப்பப்பட்டுள்ளது. கோயிலின் மேல்தளத்திலிருந்து நகரின் முழுத் தோற்றத்தினைக் காணலாம். இது கஜுராஹோவின் கந்தரியா மகாதேவா கோயிலின் பிரதி என்று கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 710

  One-day trip : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை... ஐதராபாத்தில் பார்க்க வேண்டிய விஷயங்கள்..!

  பேகம்பஜார்..
  பேகம் பஜார் இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள மிகப்பெரிய வணிக சந்தையாகும். இது குதுப் ஷாஹி ஆட்சியின் போது நிறுவப்பட்டது. இது 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என நம்பப்படுகிறது. பேகம் பஜார் பழைய நகரத்தில் உள்ள நயா புல் பாலத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 810

  One-day trip : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை... ஐதராபாத்தில் பார்க்க வேண்டிய விஷயங்கள்..!

  மஹாபோதி புத்த விஹாரம்
  கிழக்கு மாரேட்பள்ளியில் மகேந்திரா மலையில் அமைந்துள்ள மஹாபோதி புத்த விஹாரம் ஒரு புத்த கோவில் மற்றும் மடாலயம் ஆகும். தியான மண்டபம்,  நூலகம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த இடத்தை 14 ஆவது தலாய் லாமா  வைத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 910

  One-day trip : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை... ஐதராபாத்தில் பார்க்க வேண்டிய விஷயங்கள்..!

  கோல்கொண்டா கோட்டை..
  கோல்கொண்டா அல்லது கோல்கண்டா, தென் மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமாக இருப்பதுடன், பண்டைய காகதீய ராச்சியத்தின் தலைநகராகவும் இருந்தது. இந்த கோட்டை பிரதாபருத்ராவால் மண் சுவர்களால் கட்டப்பட்டது. இது ஐதராபாத் நகருக்கு மேற்கே 11கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா ஆகும்.

  MORE
  GALLERIES

 • 1010

  One-day trip : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை... ஐதராபாத்தில் பார்க்க வேண்டிய விஷயங்கள்..!

  ஹுசைன் சாகர்..
  ஏரியின் மையத்தில் உள்ள பெரிய புத்தர் சிலை மூலம் இதை அடையாளம் காணலாம். குடும்பத்துடன் ஒரு நாள் பயணத்திற்கு ஒரு சிறந்த இடம், ஏரியில் படகு சவாரி, நீண்ட நடை, தெரு உணவு, லும்பினி பூங்கா மற்றும் என்டிஆர் கார்டன் ஆகியவை அருகிலேயே உள்ளன.

  MORE
  GALLERIES