முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » டிரெக்கிங் செல்லும்போது மறக்காமல் நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் லிஸ்ட் இதோ..!

டிரெக்கிங் செல்லும்போது மறக்காமல் நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் லிஸ்ட் இதோ..!

ட்ரெக்கிங் போகும்போது ஆடைகளில் கவனம் தேவை. போகும் இடத்திற்கு ஏற்ப ஆடைகள் அணிவது முக்கியம்.

 • 19

  டிரெக்கிங் செல்லும்போது மறக்காமல் நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் லிஸ்ட் இதோ..!

  மலையேற்றம், ட்ரெக்கிங் என்பது குழந்தைகள், இளைஞர்கள், என்று பலருக்கும் பிடித்த சாகச மற்றும் சுவாரசியமான பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். குறிப்பாக இயற்கை ஆர்வலர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் மலைப்பகுதியை நோக்கி பயணம் எடுப்பார்கள்.

  MORE
  GALLERIES

 • 29

  டிரெக்கிங் செல்லும்போது மறக்காமல் நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் லிஸ்ட் இதோ..!

  வெயில் காலம் வேறு வந்துவிட்டது. அதனால் புதிதாக சிலர் இந்த விடுமுறைக்கு மலை ஏறி பார்ப்போமே என்று கூட யோசிக்கலாம். அப்படி புதியவர்களுக்கு மலை ஏறும்போது என்னென்ன எடுத்து செல்ல வேண்டும் என்று தெரியாது. மலை ஏறும்போது ஐயோ இதை எடுத்து வரவில்லையே என்று யோசிப்பர். அவர்களுக்கு உதவவே இந்த லிஸ்ட்.

  MORE
  GALLERIES

 • 39

  டிரெக்கிங் செல்லும்போது மறக்காமல் நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் லிஸ்ட் இதோ..!

  மலையேற்றத்தின் போது உங்கள் கால்களைப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் வைத்திருக்க சரியான காலனி மிக அவசியம். கால் பதித்து தான் மலை ஏறவேண்டும். அதில் அசவுகரியம் இருந்தால் பயணம் இனிதாக இருக்காது. எந்த மலையில் இருக்கிறீர்களோ அதற்கு ஏற்ப உறுதியான உள்ளங்கால்கள் மற்றும் கணுக்கால் ஆதரவுடன் கூடிய ஒரு ஸ்போர்ட்ஸ் ஷூ அல்லது பூட்ஸ் அணிந்து செல்லுங்கள்.

  MORE
  GALLERIES

 • 49

  டிரெக்கிங் செல்லும்போது மறக்காமல் நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் லிஸ்ட் இதோ..!

  அறிமுகமில்லாத நிலப்பரப்பு, மலைப்பாதையில் செல்கிறீர்கள் என்றால் நிச்சயமாக அந்த மலைப்பாதையின் வரைபடம், காம்பஸ் அல்லது ஏதாவது ஒரு திசை மற்றும் வழிகாட்டும் கருவியை கையில் வைத்திருங்கள். அடர்ந்த காடுகளில் நெட்வொர்க் கிடைக்காது. அப்போது இந்த வரைபடங்கள் பேருதவியாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 59

  டிரெக்கிங் செல்லும்போது மறக்காமல் நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் லிஸ்ட் இதோ..!

  அதேபோல ட்ரெக்கிங் போகும்போது ஆடைகளில் கவனம் தேவை. போகும் இடத்திற்கு ஏற்ப ஆடை அணிவது முக்கியம். அதிகம் வெப்பம் உள்ள இடங்களில் செல்லும்போது பருத்தி ஆடைகளை அணிந்து செல்வது நல்லது. அது வியர்வையை சீக்கிரம் உறிஞ்சிக்கொள்ளும். அதுவே பனிவிழும் இடமாக இருந்தால் உங்கள் உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள அடர்த்தியான உடைகளையும் லெதர் ஜாக்கெட்டுகளும் அணிந்து செல்லுங்கள். போதுமான உடைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 69

  டிரெக்கிங் செல்லும்போது மறக்காமல் நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் லிஸ்ட் இதோ..!

  மலையேற்றம் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்க போதுமான தண்ணீர் மற்றும் சிற்றுண்டிகளை எடுத்துச் செல்லுங்கள். கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் கொழுப்புகளின் நல்ல சமநிலையை வழங்கும் இலகுரக மற்றும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும். குளுக்கோஸ் பாக்கெட்டுகளை கையில் வைத்துக்கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 79

  டிரெக்கிங் செல்லும்போது மறக்காமல் நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் லிஸ்ட் இதோ..!

  ட்ரெக்கிங்ல கிழியாத சட்டை எங்கே இருக்கு. பாதையில் விபத்துகள் ஏற்படலாம், எனவே கட்டுகள் போட மருந்து, துணி, வலி ​​நிவாரணிகள் மற்றும் கிருமி நாசினிகள் போன்ற அடிப்படை பொருட்களுடன் முதலுதவி பெட்டியை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். அவசர காலங்களில் அடிப்படை முதலுதவி சிகிச்சைகளை அறிந்து கொள்வதும் அவசியம்.

  MORE
  GALLERIES

 • 89

  டிரெக்கிங் செல்லும்போது மறக்காமல் நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் லிஸ்ட் இதோ..!

  ட்ரெக்கிங் சென்று தங்குவதாக இருந்தால் அதற்கு தேவையான தங்கும் பொருட்கள், போர்வைகள் எடுத்துச் செல்ல வேண்டும். காற்றடைக்கும் தலையணைகள் போன்றவை எளிதாக எடுத்து செல்ல உதவியாக இருக்கும். எளிதாக சுருட்டி எடுத்துச்செல்லக்கூடிய அதே நேரம் வெதுவெதுப்பாக வைத்திருக்கும் ஸ்லீப்பிங் பேக் கிடைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 99

  டிரெக்கிங் செல்லும்போது மறக்காமல் நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் லிஸ்ட் இதோ..!

  கேம்ப் பயர் போடும் திட்டம் இருந்தால் சுள்ளிகளை வெட்ட ஒரு சிறிய  கத்தி, நெருப்பு மூட்ட லைட்டர் போன்றவற்றை எடுத்து செல்லவும். ஆனால் காட்டில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே தீ மூட்டவும். அதே போல அந்த இடத்தை விட்டு கிளம்பும்போது சரியாக அந்த நெருப்பை அணைத்துவிட்டு செல்ல வேண்டும்.

  MORE
  GALLERIES