இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஆரம்பகட்டத்தில் போடப்பட்ட கடுமையான ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது. சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல முதலில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது விடுமுறை காலம் என்பதால் மக்கள் தங்கள் குடும்பங்களுடன் சுற்றுலா செல்ல விரும்புவார்கள்.
வீட்டிலிருந்து ஒரு குறுகிய விடுமுறையைத் திட்டமிடுவதற்கான சரியான சந்தர்ப்பமாக புத்தாண்டு இருக்க முடியும். இருப்பினும், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அதிக செலவு செய்ய முடியாது என்பதால் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல சில சுற்றுலா இடங்களுக்கு நீங்கள் சென்று வரலாம். வீட்டை விட்டு வெளியேறுவதும் இயற்கையோடு ஒன்றாக மாறுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். அந்த வகையில், நீங்கள் செல்ல கூடிய சிறந்த சுற்றுலா தளங்கள் குறித்து காண்போம்.
1. ஊட்டி (Ooty: ஊட்டி மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இது நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஊட்டியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் குன்னூர் இருக்கிறது என்றால் ஊட்டியில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் கோத்தகிரி உள்ளது. இந்த மூன்று இடங்களுமே மலைவாசஸ்தலங்கள் ஆகும். கோவையில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஏரிகள், அடர்ந்த காடுகள், பசும் புல்வெளிகள், வித்தியாசமான தாவரங்கள், தூய்மையான காற்று என்று மக்களை கவர்ந்திழுக்க கூடிய ஏராளமான சிறப்பம்சங்கள் ஊட்டியில் இருக்கின்றன.
மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயிலில் ஊட்டிக்கு செல்வது இன்னும் சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். தாவரவியல் பூங்கா, ஏரியில் படகு சவாரி, பல வண்ண நிறங்களில் ஏராளமான ரோஜாக்கள் அணிவகுத்து இருக்கும் பூங்கா, அருங்காட்சியகம் போன்றவை ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும். தொட்டபெட்டா, பொட்டானிக்கல் கார்டன், கெய்ரன் ஹில்ஸ், சில்ட்ரன்ஸ் பார்க், அவிலஞ்சி, கெய்ரன் ஹில்ஸ் போன்ற எண்ணற்ற இடங்கள் உள்ளன.
5. ஏற்காடு (Yercaud) : ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர்-4969 அடி உயர்த்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ. ஏற்காடு, ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கியதாகவும் வட்டத் தலைமையிடமாகவும் உள்ளது. மிகவும் சிக்கனமான மலைவாஸ் தலமாகும். எனவே இது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது. கோடைகாலத்தில் வெப்பநிலை 16 ° C முதல் 30 ° C வரை இருக்கும். இங்கே மலையேற்றம் மிகவும் மகிழ்ச்சியான அனுபவங்களில் ஒன்றாகும். உயர் மரங்கள் மற்றும் பச்சை காபிக்கு இடையில் ரிசார்ட்டுகளுடன் சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு இது பிரபலமானது.
2. பாண்டிச்சேரி (Pondicherry) : பாண்டிச்சேரி ஒரு அழகான பிரெஞ்சு நகரம் உங்களுக்கு பிரெஞ்சு காலனித்துவ கட்டிடக்கலை மற்றும் பூகெய்ன்வில்லேவுடன் கூடிய அழகிய பவுல்வர்டுகளை வழங்குகிறது. புதுச்சேரி சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், மத்திய அரசின் ஒன்றியப் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது. முன்பு இந்த நகரம் பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. புதுச்சேரி, ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.
அதனால் இங்குள்ள அடித்தட்டு மக்களும் பிரெஞ்சுச் சொற்களை, மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். ஆந்திர மாநிலத்தின், காக்கி நாடாவுக்கு அருகாமையில் உள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையில் உள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகில் உள்ள மாஹே நகரும், இந்த மாநிலத்தின் ஆட்சிப் பகுதிகளாக விளங்குகின்றன. பாண்டிச்சேரியில் நோணாங்குப்பம் படகு இல்லம், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, அருங்காட்சியகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.
3. மூணார் (Munnar) : மூணார் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் மலைவாசஸ்தலம். இந்தியாவிலே சிறந்த மலைவாசத்தலங்களில மூணார் ஒன்றாகும். இப்பகுதி முழுவதும் அதிகளவில் தேயிலை தோட்டங்களாலும், குன்றுகளான நிலப்பகுதிகளும், கண்களுக்கு கவரிச்சியூட்டக்கூடிய தாவரங்களும், விலங்கினங்களும் உள்ளதால் அனைவரும் விரும்பக்கூடிய தலமாக உள்ளது. ஈரவிகுளம், தேசிய பூங்கா, மாட்டுபட்டி அணை, தேவிக்குளம், அட்டகுள் நீர்வீழ்ச்சி, புகைப்பட புள்ளி, எக்கோ பாயிண்ட், போத்தமடு, மலையேற்றம் ஆகிய இடங்கள் சுற்றி பார்க்க சிறந்த இடங்களாக இருக்கும்.
4. மைசூர் (Mysore) : நகரம் முழுவதும் அரண்மணைகள், பூங்காக்கள், ஏரிகள், சந்தன மரங்கள், பட்டுகள், திகைப்பூட்டும் வரலாற்று இடங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இயற்கை வளங்கள், இயற்கையின் பொக்கிஷங்களை அடக்கிய நகரமாக விளங்குகிறது. இந்நகரம் முழுவதும் செழிப்பான வரலாற்று பாரம்பரியமிக்க சிறப்புக்களையும், நவீன வாழ்க்கை முறைகளையும் கொண்டுள்ளது. மைசூர் அரண்மணை, பிருந்தாவன் பூங்கா, சாமுண்டி மலை, பிலோமினா தேவாலயம், இரயில்வே அருங்காட்சியகம், மெழுகுவர்த்தியால் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம், கரன்ஜி ஏரி, மைசூர் விலங்கியல் பூங்கா, ஜாக்மோகன் அரண்மனை, மரபு ஆராய்ச்சி அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
5. ஏற்காடு (Yercaud) : ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர்-4969 அடி உயர்த்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ. ஏற்காடு, ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கியதாகவும் வட்டத் தலைமையிடமாகவும் உள்ளது. மிகவும் சிக்கனமான மலைவாஸ் தலமாகும். எனவே இது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது. கோடைகாலத்தில் வெப்பநிலை 16 ° C முதல் 30 ° C வரை இருக்கும். இங்கே மலையேற்றம் மிகவும் மகிழ்ச்சியான அனுபவங்களில் ஒன்றாகும். உயர் மரங்கள் மற்றும் பச்சை காபிக்கு இடையில் ரிசார்ட்டுகளுடன் சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு இது பிரபலமானது.
6. ஆலப்புழா (Alleppey) : ஆலப்புழா, கேரள மாநிலத்தின் அழகிய சுற்றுலாத் தளங்களுள் ஒன்று. இது கொச்சி மாநகரத்தின் தெற்கு பகுதியிலும், கோட்டயத்தின் மேற்கு பகுதியிலிலும் அமைந்துள்ளது. ஆலப்புழாவிலிருந்து தெற்கு திசையில் கொல்லம் நகரமும், கொஞ்சம் தொலைவில் வர்க்கலா கடற்கரையும் அமைந்துள்ளது. பத்திரமண்ணல், கிருஷ்ணாபுரம் அரண்மனை, படகு இல்லங்கள், ஆலப்பி பீச் ஆகியவை ஆலப்புழாவில் காண வேண்டிய இடங்கள் ஆகும்.