பியா நீர்வீழ்ச்சி: பியா நீர்வீழ்ச்சியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சாதாரணமாக அருவி என்றால் கீழ்நோக்கி விழுவதை தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் நீர் மேல் நோக்கிப் பாயும் அதிசயத்தைப் பார்த்தீர்களா? இந்த நீர்வீழ்ச்சி மகாராஷ்டிராவின் கொங்கன் கடற்கரையில் தக்காண மலையில் அமைந்துள்ளது. இங்கு காற்றின் திசை பல மடங்கு வேகமாக வீசுவதால் நீர்வீழ்ச்சி மேல்நோக்கி பாய்கிறது.
ஓரிகான் வோர்டெக்ஸ், அமெரிக்கா: பண்டைய காலங்களில், குதிரைகள் நிறுத்த பயன்பட இந்த இடத்தில் உள்ள கட்டமைப்புகள் எல்லாமே சாய்ந்துள்ளன. ஓரிகான் வோர்டெக்ஸ் "உயர மாற்றத்திற்கு" பிரபலமானது, ஏனெனில் இரண்டு நபர்களின் உயரம் ஒவ்வொருவரும் நிற்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடும். அவை ஒளியியல் மாயைகளால் ஏற்படுகின்றன.
செயின்ட் இக்னேஸ் மர்மப் பகுதி, அமெரிக்கா: பிரெஞ்சு ஆய்வாளரும் பாதிரியாருமான ஜாக்வெஸ் மார்க்வெட் 1671 இல் இந்த தளத்தில் புனித இக்னேஸ் மிஷனை நிறுவினார். இங்கு பூமியின் ஈர்ப்பு விசை 300 அடி பரப்புள்ள நிலத்தில் வேலை செய்வதில்லை போலும். இங்கே நிற்கும் போது, நீங்கள் மிதப்பது போல் உணர்கிறீர்கள். அதற்கு கரணம் இதன் சாய்ந்த நிலப்பரப்பு தான். சாய்வாக நடப்பது போன்ற உணர்வை அது ஏற்படுத்துகிறது.