முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இயற்கையே பல்கோணகற்களை வெட்டி அடுக்கிய கடற்கரை... அயர்லாந்தின் யுனெஸ்கோ தலம் பற்றி தெரியுமா.?

இயற்கையே பல்கோணகற்களை வெட்டி அடுக்கிய கடற்கரை... அயர்லாந்தின் யுனெஸ்கோ தலம் பற்றி தெரியுமா.?

கவுண்டி ஆன்ட்ரிமில் உள்ள அழகிய காஸ்வே கரையோரப் பாதையில் அமைந்துள்ள இந்த இடம், அடுக்கு பாசால்ட்டின் அறுகோண இன்டர்லாக் கல் தூண்களுக்காக அறியப்படுகிறது.

  • 18

    இயற்கையே பல்கோணகற்களை வெட்டி அடுக்கிய கடற்கரை... அயர்லாந்தின் யுனெஸ்கோ தலம் பற்றி தெரியுமா.?

    பூமியில் உள்ள பல இடங்கள் மனிதர்களுக்கு அதிசயத்தை ஆச்சரியத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கும். அது எப்படி உருவானது என்ற மர்மம் மட்டும் பல ஆண்டுகளாக விவரிக்க படாமலே தொடரும். அப்படியான ஒரு இடத்தை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்

    MORE
    GALLERIES

  • 28

    இயற்கையே பல்கோணகற்களை வெட்டி அடுக்கிய கடற்கரை... அயர்லாந்தின் யுனெஸ்கோ தலம் பற்றி தெரியுமா.?

    அயர்லாந்தின் சிறந்த இயற்கை அதிசயங்களில் ஒன்று ராட்சத காஸ்வே  கடல்பகுதியாகும். கவுண்டி ஆன்ட்ரிமில் உள்ள அழகிய காஸ்வே கரையோரப் பாதையில் அமைந்துள்ள இந்த இடம், அடுக்கு பாசால்ட்டின் அறுகோண இன்டர்லாக் கல் தூண்களுக்காக அறியப்படுகிறது. இது சுற்றுலாத்தலம் என்பதை தாண்டி வடக்கு அயர்லாந்தில் உள்ள ஒரே யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக விளங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 38

    இயற்கையே பல்கோணகற்களை வெட்டி அடுக்கிய கடற்கரை... அயர்லாந்தின் யுனெஸ்கோ தலம் பற்றி தெரியுமா.?

    புராணங்கங்களை நம்புபவர்கள் ஸ்காட்லாந்தில் பென்னன்டோனர் மற்றும் அயர்லாந்தில் உள்ள ஃபின் மெக்கூல் ஆகிய இரண்டு ராட்சதர்களுக்கு இடையிலான போட்டியின் விளைவாக இந்த தரைப்பாதை உருவானதாக சொல்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 48

    இயற்கையே பல்கோணகற்களை வெட்டி அடுக்கிய கடற்கரை... அயர்லாந்தின் யுனெஸ்கோ தலம் பற்றி தெரியுமா.?

    இங்கு ஏறக்குறைய 40,000 கல் தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பொதுவாக ஐந்து முதல் ஏழு ஒழுங்கற்ற பக்கங்களைக் கொண்டவை. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு குன்றின் முகங்களுக்கு வெளியே அவை கடலுக்குள் ஊர்ந்து செல்வது போல் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 58

    இயற்கையே பல்கோணகற்களை வெட்டி அடுக்கிய கடற்கரை... அயர்லாந்தின் யுனெஸ்கோ தலம் பற்றி தெரியுமா.?

    50 முதல் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பேலியோஜின் காலத்தில், ராட்சத காஸ்வே எரிமலைக்குழம்புகள் கடற்கரையை நோக்கி அடுத்தடுத்து பாய்ந்து கடலைத் தொட்டபோது  குளிர்ந்தது.

    MORE
    GALLERIES

  • 68

    இயற்கையே பல்கோணகற்களை வெட்டி அடுக்கிய கடற்கரை... அயர்லாந்தின் யுனெஸ்கோ தலம் பற்றி தெரியுமா.?

    பாசால்ட் அடுக்குகள் நெடுவரிசைகளை உருவாக்கியது.மேலும் இந்த நெடுவரிசைகளுக்கு இடையே உள்ள அழுத்தம் அவற்றை 15 முதல் 20 அங்குலங்கள் விட்டம் மற்றும் 82 அடி உயரம் வரை மாறுபடும் பலகோண வடிவங்களாக செதுக்கியது. அவை சராசரியாக 330 அடி உயரத்தில் பாறைகளில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 78

    இயற்கையே பல்கோணகற்களை வெட்டி அடுக்கிய கடற்கரை... அயர்லாந்தின் யுனெஸ்கோ தலம் பற்றி தெரியுமா.?

    1693 இல் முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்டது, தி ஜெயண்ட்ஸ் காஸ்வே மற்றும் அதன் கடலோர சுற்றுப்புறங்கள் 1961 இல் தேசிய அறக்கட்டளைக்கு (இயற்கை மற்றும் கட்டடக்கலை அதிசயங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிக்கும் ஒரு பிரிட்டிஷ் அமைப்பு) ஒப்படைக்கப்பட்டது. பின்னர், தளம் சுமார் 200 ஏக்கர் (80 ஹெக்டேர்) வரை விரிவாக்கப்பட்டது

    MORE
    GALLERIES

  • 88

    இயற்கையே பல்கோணகற்களை வெட்டி அடுக்கிய கடற்கரை... அயர்லாந்தின் யுனெஸ்கோ தலம் பற்றி தெரியுமா.?

    1693 இல் முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்ட இது 1961 இல் தேசிய அறக்கட்டளைக்கு (இயற்கை மற்றும் கட்டடக்கலை அதிசயங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிக்கும் ஒரு பிரிட்டிஷ் அமைப்பு) ஒப்படைக்கப்பட்டது. பின்னர், தளம் சுமார் 200 ஏக்கர் (80 ஹெக்டேர்) வரை விரிவாக்கப்பட்டது.

    MORE
    GALLERIES