கோடை காலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே அதை சமாளிக்க பல வித முயற்சிகளை செய்து வருவோம். உணவு முதல் வீட்டில் உள்ள பொருட்கள் வரை பலவற்றை நாம் புதிதாக முயற்சி செய்து, வெயிலை சமாளிப்போம். இவை அனைத்தையும் தாண்டி கோடை காலத்தில் சுற்றுலா செல்வது தான் பலரின் நோக்கமாக இருக்கும். வெயிலை சிறப்பாக சமாளிக்க குடும்பத்துடன் செல்ல கூடிய சில முக்கிய இடங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
ஜெய்ப்பூர் : உங்கள் குழந்தைகளை ராஜா மற்றும் ராணிகள் உலகிற்கு அறிமுகப்படுத்த ஜெய்ப்பூரை விட சிறந்த இடம் வேறு ஒன்று இருக்க முடியாது. இது ஒரு அற்புதமான சுற்றுலா தலமாகும். பழைய கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் அனைத்தையும் இங்கு காணலாம். இவை அனைத்தும் கண்கவர் அனுபவமாக இருக்கும். இந்த அழகான நகரத்தில் பார்த்து ரசிக்க பல உள்ளது. குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க இந்த இடம் மிகவும் சிறந்தது.
டார்ஜிலிங் : வங்காள தேசத்தின் சமவெளிகளில் இருந்து கோடை காலத்தில் டார்ஜிலிங்கிற்கு பயணம் செய்வது என்பது ஒரு பாரம்பரியமான சுற்றுலாவாகும். உலகளாவிய சுற்றுலா தளங்களின் பட்டியலில் இது முதன்மையான இடத்தில் உள்ளது. கஞ்சன்ஜங்கா பகுதியும் இங்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். இந்த இடத்தின் இயற்கை எழில் மறக்க முடியாத அனுபவத்தை உங்களுக்கு தரக்கூடும்.
கேரளா : நாட்டின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் கேரளாவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. கேரளாவில் எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சிகள் நிறைந்திருக்கும். இது உங்களுக்கு ஒரு மாயாஜால அனுபவத்தை தரக்கூடும். மேலும் கேரளா அரசு, பண்டைய தோற்றம் மற்றும் இயற்கை சூழலுடன் நவீன வசதிகளை வெற்றிகரமாக தற்போது இணைத்துள்ளது. எனவே, குளிரூட்டப்பட்ட படகில் மகிழ்ச்சியாக பயணம் செய்யலாம். அதே போன்று, 5 ஸ்டார் ஹோட்டல் அனுபவத்தையும் இங்கு நீங்கள் பெறலாம். பலர் கேரளாவிற்கு ஆயுர்வேத மசாஜ் செய்து கொள்வதற்காகவே வருவதும் உண்டு.
மணாலி : இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களில் மிகவும் சிறப்பு மிக்கது இந்த மணாலி ஆகும். பொதுவாக சுற்றுலா விரும்பிகள், தேனிலவு செல்பவர்கள், குடும்பத்துடன் சுற்றுலா செல்வோர் என பலதரப்பட்ட பயணிகள் இங்கு சென்று கோடை காலத்தை செலவிடுவார்கள். இந்த பிரம்மாண்டமான மலைகள் மீது யாருக்கு இருந்தாலும் புத்துணர்வு பிறக்க கூடும். வட இந்தியா சுற்றுலா தளங்களில், நீங்கள் அவசியம் செல்ல வேண்டிய இடமாகும்.
டெல்லி : டெல்லியை சுற்றி பார்ப்பது என்பது ஒரு புதிய கிரகத்தை சுற்றி பார்ப்பது போன்றதாகும். ஒருபுறம், வரலாற்று அடையாளங்கள், அரசாங்க கட்டிடங்கள் பல உள்ளன. மறுபுறம், மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்கும் நவீன உலகம் உள்ளது. டெல்லியில் பார்ப்பதற்கும், நிறைய நேரம் செலவிடுவதற்கும் பல பகுதிகள் உள்ளன. இவற்றின் பழங்கால தெருக்கள் முதல் நவீன ஆடம்பரமான இடங்கள் வரை, இது ஒரு முடிவற்ற சாகச பயணமாக இருக்கும். எனவே குடும்பத்துடன் டெல்லிக்கு அவசியம் சுற்றுலா சென்று வரலாம்.