அண்டார்டிகா கண்டத்தின் மிக உயரமான சிகரத்தின் பெயர் மவுண்ட் வின்சன். சுமார் 4,892 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரம் வின்சன் மாசிஃப் என்றும் அழைக்கப்படுகிறது. பத்மஸ்ரீ டாக்டர் அருணிமா சின்ஹா இந்த மலை உச்சியில் இந்தியக் கொடியை ஏற்றியிருக்கிறார். அதன் பின்னர் பலரும் இந்த பனிமலையை எற ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அண்டார்டிக் தீபகற்பம் அண்டார்டிகா கண்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த தீபகற்பம் சுற்றுலாவிற்கு ஏற்ற இடங்களில் ஒன்றாகும். இந்த இடம் 'பனிக்காடுகளின் வீடு' என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள மலைச் சிகரங்களும், பெரிய பனிப்பாறைகளும் மக்களைக் கவருகின்றன. அது மட்டும் இல்லாமல் இங்கு அதிக எண்ணிக்கையிலான பெங்குவின்களைப் பார்க்கலாம்.
அண்டார்டிகாவில் சுற்றுலாவில் மற்றொரு முக்கிய இடம் தெற்கு ஷெட்லேண்ட் தீவுகள். முற்றிலும் பனியால் மூடப்பட்ட இந்த தீவு அண்டார்டிக் தீபகற்பத்திற்கு வடக்கே 160 கிமீ தொலைவில் உள்ளது.தெற்கு ஷெட்லேண்ட் தீவில் உள்ள ஆராய்ச்சி மையங்களுக்கு கோடைபருவத்தில் செல்ல வேண்டும். இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்தியாவின் மைத்ரி, பாரதி என்ற ஆய்வகங்கள் கூட உள்ளன,
1979 முதல், அண்டார்டிகாவின் நிலைமை செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அண்டார்டிகாவின் பனி கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக உருகி வருகிறது. சில நொடிகளில் பெரிய பெரிய பனிப்பாறைகள் சரிந்து கடலில் கலக்கும் வீடியோக்களை பார்த்திருப்போம். அதனால் தான் உலகின் ஆபத்தான இடம் என்று சொல்கிறோம்.