தென் அமெரிக்க நாடான சிலி நாட்டில் உள்ள ராபா நுய் அல்லது ஈஸ்டர் தீவின் தபதி திருவிழா என்பது விளையாட்டு நிகழ்வுகள், பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றின் கலவையாகும். 20 கிலோ வாழைப்பழங்களை சுமந்து கொண்டு ஓடுவது, சர்ஃபிங், நீச்சல் உள்ளிட்ட சுவாரசிய விளையாட்டுகள் பகலில் நடக்கும். இரவில் உடல் முழுக்க வண்ணம் பூசி, கதை சொல்லும் காலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
இறுதிச்சுற்று படத்தில் செங்கிஸ்கான் கதை கேட்டிருப்போம். அவரது நாடான மங்கோலியாவில் சந்திர புத்தாண்டு என்பது மிக முக்கியமான திருவிழாவாகும். "வெள்ளை நிலவு" என்று பொருள்படும் “சாகன் சார்" புத்தாண்டு அன்று பாலாடை, இனிப்புகள் மற்றும் ஏராளமான ஓட்கா போன்ற உள்ளூர் சுவையான உணவுகளை பரிமாறுகின்றனர். இந்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் 23 வரை இடைப்பட்ட நேரத்தில் கொண்டாடப்படுகிறது.
சியாங் மாய் மலர் திருவிழா தாய்லாந்தின் மிகவும் வண்ணமயமான நிகழ்வுகளில் ஒன்றாகும். தென்கிழக்கு ஆசிய பகுதியின் மிகப்பெரிய தாவர பல்லுயிர் கொண்ட நாடாக விளங்கும் தாய்லாந்தின் இந்த திருவிழாவின் போது டமாஸ்க் ரோஜா, மஞ்சள் ராட்சப்ரூக், வெள்ளை கிரிஸான்தமம்கள் போன்ற பலவிதமான பூக்களை மக்கள் அலங்கரிக்க பயன்படுத்துகின்றனர்.
சீன சந்திர புத்தாண்டின் முதல் முழு நிலவின் போது நடைபெறும், பிங்சி ஸ்கை லாந்தர் திருவிழாவின் போது, தைவானில் உள்ள ஷிஃபென் கிராமத்திற்கு மேலே ஆயிரக்கணக்கான ஒளிரும் விளக்குகள் மிதக்கின்றன. தங்கள் கனவுகள் ஈடேற வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான பாக்கள் அரிசித்தாளில் செய்யப்பட்ட லாந்தர்களை வானில் மிதக்கச் செய்கின்றனர்.
பிரெஞ்சு ஆல்ப்ஸ் மரிடைம்ஸில் உள்ள கோட் டி அஸூரில் அமைந்துள்ள மென்டன் நகரம் மிகவும் புதுமையான மற்றும் வண்ணமயமான La Fête du Citron எனும் எலுமிச்சை திருவிழாவிற்கு பெயர் பெற்றது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. மென்டன் பகுதி உயர்தர எலுமிச்சை உற்பத்தியாளர்களை கொண்டது. இதன் முதல் திருவிழா 1934 இல் மென்டனில் உள்ள ஹோட்டல் ரிவியரா மைதானத்தில் நடந்தது.
மற்றொரு சுவாரசிய திருவிழா என்றால் அது இத்தாலி நாட்டில் நடக்கும் வெனிஸ் கார்னிவலை சொல்லலாம். லட்சக்கணக்கான மக்கள் வெனிஸ் நகரத்தின் மத்தியில் முகமூடிகள் அணிந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கொண்டாடுகின்றனர். மேலும் திருவிழா நிகழ்வுகளுக்குகூடுதல் உணர்வைச் சேர்க். La Maschera Più Bella ("மிக அழகான முகமூடி") ஆண்டுதோறும் சர்வதேச பேஷன் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களின் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது.