முகப்பு » புகைப்பட செய்தி » lifestyle » கண்ணைக் கவரும் கலப்பின கோவில்கள்!

கண்ணைக் கவரும் கலப்பின கோவில்கள்!

Hybrid Temples in India : கோவில் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறைகளை உடைத்து கலாச்சார, கட்டிடக் கலைகளை கலந்து உருவாக்கப்பட்ட கோவில்களின் தொகுப்பு.

  • 17

    கண்ணைக் கவரும் கலப்பின கோவில்கள்!

    மேற்கு வங்காளத்தின் பிஷ்ணுபூரில் 1644 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கேஷ்டா-ராயா கோவில், ஜோர்-பங்களா என்று அழைக்கப்படும். சாதாரண கோவில் போல் அல்லாமல் இரட்டை குடிசையின் வடிவம் கொண்டது.. களிமண், செங்கல் மற்றும் மூங்கில் ஆகியவற்றைப் பயன்படுத்தி கட்டப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 27

    கண்ணைக் கவரும் கலப்பின கோவில்கள்!

    கேஷ்டா-ராயா கோவில்

    MORE
    GALLERIES

  • 37

    கண்ணைக் கவரும் கலப்பின கோவில்கள்!

    காஷ்மீரில் உள்ள 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்ட்ரேதன் கோயில். காஷ்மீரி கட்டிடக்காரர்கள் கோவில்களை உருவாக்க பெரிய கற்களைப் பயன்படுத்தினர். பௌத்த மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட கூறுகளுடன். காஷ்மீரி பாணியின் இரட்டை-பென்ட் கூரைகள், நுழைவாயில்கள் மற்றும் சிற்பங்களுக்கான முக்கோண வளைவுகளோடு அமைந்துள்ளது

    MORE
    GALLERIES

  • 47

    கண்ணைக் கவரும் கலப்பின கோவில்கள்!

    மத்தியப் பிரதேசத்தின் ஓர்ச்சாவில் உள்ள சதுர்புஜ் மந்திர். பண்டேலா பாணி கட்டிடக்கலையின் பிரமாண்டமானபடைப்பாகும். இது அக்பர் மற்றும் ஜஹாங்கீரின் முகலாய நீதிமன்றங்களிலிருந்து பெறப்பட்ட பாணிகளுடன் உள்ளூர் மரபுகளை இணைத்து 1605−27 வரை ஓர்ச்சாவை ஆண்ட பீர் சிங் தேவ் ஆதரவால் கட்டப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 57

    கண்ணைக் கவரும் கலப்பின கோவில்கள்!

    இலங்கையின் பொலன்னறுவாவில் உள்ள பெரும்பாலான விகாரைகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. சிவன் தேவாலயத்தின் சுவர்கள் மட்டுமே காணப்படுகின்றன. வானவன் மகாதேவியின் நினைவாக முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில், உருவாக்கப்பட்டது என்று கல்வெட்டுகள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 67

    கண்ணைக் கவரும் கலப்பின கோவில்கள்!

    மகாதேவா கோயில், தம்ப்டி சுர்லா. கோவாவில் எஞ்சியிருக்கும் 12-13 ஆம் நூற்றாண்டுக் கோயிலாகும். இக்கோவில் மூன்று கட்ட மாற்றங்களைச் சந்தித்துள்ளன. புதிய-ரோமானிய பாணி (17 ஆம் நூற்றாண்டு), புதிய -ரோமன் மற்றும் மராத்தா உருவங்களின் கலப்பு (18-19 ஆம் நூற்றாண்டுகள்) மற்றும் சமகால கோவா இந்து பாணி (1850-1950) .

    MORE
    GALLERIES

  • 77

    கண்ணைக் கவரும் கலப்பின கோவில்கள்!

    9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சாமா வம்சத்தின் ஆட்சியின் போது குஜராத், கோட்டாயில் (940-950 CE) மகா-குர்ஜரா பாணி சிவன் கோயில் கட்டப்பட்டது. கட்ச் சோலங்கி ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக மாறியதும், ராஜஸ்தானின் மஹா-மாரு பாரம்பரியத்தில் இருந்து வடிவமைப்பு கூறுகளை ஒருங்கிணைத்த மாரு-குர்ஜரா பாணி என்ற ஒரு புதிய பாணி தோன்றியது.

    MORE
    GALLERIES