முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » மருத்துவ சுற்றுலா..! இந்தியாவில் ஏற்ற டாப் 5 இடங்கள்.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

மருத்துவ சுற்றுலா..! இந்தியாவில் ஏற்ற டாப் 5 இடங்கள்.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சை பெற ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் படையெடுத்து வருகின்றனர். 2020 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி மருத்துவ சுற்றுலா செய்யப்படும் நாடுகளில் இந்தியா பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

  • 18

    மருத்துவ சுற்றுலா..! இந்தியாவில் ஏற்ற டாப் 5 இடங்கள்.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

    மருத்துவ சுற்றுலா என்ற வார்த்தையை நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் இல்லை. அதாவது மருத்துவ காரணங்களுக்காகவும் மருத்துவ சிகிச்சைக்காகவும் பல்வேறு நாடுகளில் இருந்தும், பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் பலர் குறிப்பிட்ட இடத்தை நோக்கி படையெடுப்பது மருத்துவ சுற்றுலா என அழைக்கப்படுகிறது.முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சை பெற ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 28

    மருத்துவ சுற்றுலா..! இந்தியாவில் ஏற்ற டாப் 5 இடங்கள்.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

    2020 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி மருத்துவ சுற்றுலா செய்யப்படும் நாடுகளில் இந்தியா பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஆண்டுக்கு 9 பில்லியன் அமெரிக்க டாலரை இந்த மருத்துவ சுற்றுலா மூலம் பெறுவதாக தெரிய வந்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் “ஹீல் இன் இந்தியா” என்று திட்டத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் கிடைப்பதாக தெரியவந்துள்ளது மேலும் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட நோயாளிகள் 72 நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். 2026 ஆம் ஆண்டின் முடிவில் இந்த மருத்துவ சுற்றுலாவின் மூலம் கிட்டத்தட்ட 13 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 38

    மருத்துவ சுற்றுலா..! இந்தியாவில் ஏற்ற டாப் 5 இடங்கள்.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

    குணப்படுத்தும் மருத்துவ சிகிச்சைகள் :  அறுவை சிகிச்சைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் மற்றும் நாள்பட்ட நோய்கள் ஆகியவை அடங்கும்.தம் அழகை மேம்படுத்திக் கொள்ளவும், புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் மேற்கொள்ளப்படும் காஸ்மெட்டிக் சிகிச்சைகள், ஸ்பாஸ் ஆகியவை இதில் அடங்கும். இந்தியாவில் உள்ள ஆயுஷ் அமைச்சகம் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு பொறுப்பேற்றுள்ளது. இதில் ஆயுர்வேதா, யோகா, மற்றும் இயற்கை மருத்துவம் யுனானி, சித்தா ஹோமியோபதி ஆகிய அனைத்தும் அடங்கும்.மேலே கூறிய இந்த காரணங்களுக்காக வெளிநாட்டு மக்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்கும் டாப் 5 இடங்களை தற்போது பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 48

    மருத்துவ சுற்றுலா..! இந்தியாவில் ஏற்ற டாப் 5 இடங்கள்.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

    சென்னை, தமிழ்நாடு : தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சிகிச்சைக்காக மக்கள் படையெடுக்கின்றனர். கிட்டத்தட்ட 40% நோயாளிகள் சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற விரும்புவதாக தெரிவித்துள்ளனர். வருடத்திற்கு 200க்கும் அதிகமான வெளிநாட்டு மக்கள் மருத்துவ காரணங்களுக்காக சென்னைக்கு சிகிச்சைக்கு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 58

    மருத்துவ சுற்றுலா..! இந்தியாவில் ஏற்ற டாப் 5 இடங்கள்.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

    பெங்களூரு, கர்நாடகா : சென்னை போல பெங்களூருவும் மருத்துவ சுற்றுலாவிற்கு பெயர் போன இடமாக உள்ளது. உலகத்தின் பல நாடுகளில் இருந்தும் பல மக்கள் ரிலாக்ஸாக இருக்கவும், நல்ல சிகிச்சைக்காகவும் மற்றும் புத்துணர்ச்சிக்காகவும் பெங்களூரை நோக்கி படையெடுக்கின்றனர். மேலும் மற்ற இடங்களில் ஒப்பிடுகையில் பெங்களூரில் கிடைக்கும் சிகிச்சையின் தரம் அதிகமாகவும் அதற்கு செய்யப்படும் செலவுகள் குறைவாகவும் உள்ளது என்பது ஒரு முக்கிய காரணம்.

    MORE
    GALLERIES

  • 68

    மருத்துவ சுற்றுலா..! இந்தியாவில் ஏற்ற டாப் 5 இடங்கள்.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

    கோயம்புத்தூர், தமிழ்நாடு : நியாயமான விலையிலும் மிகச்சிறந்த மருத்துவ வசதிகளையும் அள்ளிக் கொடுப்பதால் கோயம்புத்தூர் சுற்றுலாவிற்கு பெயர் போன இடமாக உள்ளது. இங்கு அல்லோபதி மட்டுமின்றி இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா ஆயுர்வேதா யுனானி ஹோமியோபதி போன்ற பல சிகிச்சை முறைகள் அளிக்கப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 78

    மருத்துவ சுற்றுலா..! இந்தியாவில் ஏற்ற டாப் 5 இடங்கள்.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

    ஆலப்புழா, கேரளா : கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா என்ற இடத்தில் சர்வதேச நாடுகளை சேர்ந்த மக்கள் பலரும் சிகிச்சைக்காக இந்த இடத்திற்கு வருகின்றனர். இயற்கை எழில் மிகுந்த அந்த இடத்தில் இன்றும் பாரம்பரிய முறையில் மிக சிறப்பான சிகிச்சைகள் அளிக்கபடுகிறது. உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பல்வேறு விதமான மசாஜ்களும் இயற்கை முறை மருத்துவ சிகிச்சைகளும் மக்களை இந்த இடத்தை நோக்கி படையெடுக்க வைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 88

    மருத்துவ சுற்றுலா..! இந்தியாவில் ஏற்ற டாப் 5 இடங்கள்.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

    வேலூர் : தமிழ்நாடு: தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் அக்குபஞ்சர், ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மற்றும் அலோபதி உட்பட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மேலும் தமிழக அரசாங்கமே மருத்துவ சிகிச்சை பெற விரும்புவோருக்கு வேலூரை பரிந்துரை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES