மகளிர் மாதமான மார்ச் மாதம் தொடங்கிவிட்டது. இன்னும் 3 நாட்களில் மகளிர் தினம் வர இருக்கிறது. இந்த நேரத்தில் பெண்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ செல்ல தகுதியான, பாதுகாப்பான நாடுகள் எவை என்பதை நாங்கள் இங்கே அடையாளம் காட்டுகிறோம். இந்த நாடுகளுக்கு எந்த பயமும் இன்றி உங்கள் பயணத் திட்டங்களை போட ஆரம்பியுங்கள்.
உலகப் பொருளாதார மன்றத்தின் பயண மற்றும் சுற்றுலா போட்டித்திறன் அறிக்கையில் பின்லாந்து(Finland) பாதுகாப்பு அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பாவில் தனியாக பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகளில் பின்லாந்தும் ஒன்று, பெண்கள் தனியாக பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகளில் ஒன்று. நள்ளிரவு சூரியன் மற்றும் அரோரா (aurora) ஒளிக்காட்சிகளுக்கு புகழ்பெற்றது.
லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ( lord of rings)ரசிகர்களுக்கு நியூசிலாந்து(newzealand) சொர்க்கபூமி.சாகசம், விளையாட்டு, இயற்கை என்று அனைத்து விருப்பங்களையும் இங்கே ஒருங்கே காணலாம். பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின்படி, நியூசிலாந்து பயணம் செய்ய உலகின் நான்காவது பாதுகாப்பான நாடாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவிலேயே மிகக் குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்ட நாடு உருகுவே(uruguve). தென் அமெரிக்காவிற்குச் செல்ல விரும்பும் பெண்களுக்கு, தனியாகப் பயணம் செய்வதற்குப் பாதுகாப்பான நாடுகளில் உருகுவேயும் ஒன்று. அதன் தலைநகரான மான்டிவீடியோவில், பிரபலமான ரிசார்ட் நகரமான Punta del Este இல், நீங்கள் கடற்கரைகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் ஓய்வெடுக்க அமைதியான இடங்களைக் காணலாம்.
ஐஸ்லாந்து கிரகத்தின் மிகக் குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்டுள்ளது மற்றும் உலகளாவிய அமைதி குறியீட்டில் (ஜிபிஐ) முதலிடத்தில் உள்ளது. ஐஸ்லாந்து உண்மையில் அதன் பெயருக்கு தகுதியானது, ஏனெனில் நாட்டின் மேற்பரப்பில் 15% பனியால் மூடப்பட்டிருக்கும். நீங்கள் பனியில் நடந்து செல்லலாம் மற்றும் அங்குள்ள குகைகளைக் கண்டறியலாம். அதுமட்டும் இல்லாமல் பணிக்கு நடுவே எரிமலைகள் வெடிக்கும் காட்சிகளையும் காணலாம்.
உலக அமைதிக் குறியீட்டின் (ஜிபிஐ) படி, உலகின் மிகவும் அமைதியான நாடுகளில் ஜப்பான் ஆறாவது இடத்தில் உள்ளது. ஒற்றைப் பெண் பயணிகளுக்கு உலகின் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஜப்பான் ஒன்றாகும். பாரம்பரியமும் தொழில்நுட்பமும் இணையும் ஜப்பான் நாட்டில் டோக்கியோவை நாம் குறிப்பிட வேண்டும், இது உலகின் தூய்மையான மற்றும் சிறந்த-ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பெருநகரமாகும். ஒசாகா, அழகான மற்றும் பல்வேறு விஷயங்கள் நிறைந்த ஒரு நவீன நகரம்.
சிலி(chile) குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்டுள்ளது மற்றும் உலகளாவிய அமைதி குறியீட்டில் இருபத்தி நான்காவது இடத்தில் உள்ளது.அட்டகாமா(Atacama), உலகின் மிக வறண்ட பாலைவனம் மற்றும் படகோனியாவின்(Patagonia) காட்டு இயற்கை அழகு ஆகியவை இதன் ஈர்ப்புகள்.அதன் தலைநகரான சாண்டியாகோ(Santiago) மலைகளால் சூழப்பட்ட அழகிய நகரம்.