முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஒயின் தயாரிக்கும் இந்திய திராட்சைத் தோட்டங்கள்.. ஒரு நாள் விசிட் போங்க.. நல்ல அனுபவம் கிடைக்கும்.!

ஒயின் தயாரிக்கும் இந்திய திராட்சைத் தோட்டங்கள்.. ஒரு நாள் விசிட் போங்க.. நல்ல அனுபவம் கிடைக்கும்.!

இந்தியாவின் மிகவும் பிரபலமான திராட்சைத் தோட்டங்கள் எங்கே இருக்கின்றன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்..

  • 16

    ஒயின் தயாரிக்கும் இந்திய திராட்சைத் தோட்டங்கள்.. ஒரு நாள் விசிட் போங்க.. நல்ல அனுபவம் கிடைக்கும்.!

    அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒயின் தயாரிக்கும் திராட்சைத் தோட்டங்களுக்கு மிகவும் பிரபலமானவை. ஆனால் இந்தியாவிலும் மற்ற நாடுகளை போலவே செயல்படும் பிரபலமான சில திராட்சைத் தோட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை எங்கே இருக்கின்றன? அதைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்

    MORE
    GALLERIES

  • 26

    ஒயின் தயாரிக்கும் இந்திய திராட்சைத் தோட்டங்கள்.. ஒரு நாள் விசிட் போங்க.. நல்ல அனுபவம் கிடைக்கும்.!

    இந்தியாவின் மிகவும் பிரபலமான திராட்சைத் தோட்டங்களில் ஒன்று நாசிக்கில் செயல்படும் சூலா திராட்சைத் (Chula Vineyards) தோட்டங்கள் ஆகும். இந்த ஒயின் ஆலை 1999 இல் நாசிக்கிற்கு அருகிலுள்ள நாபா பள்ளத்தாக்கில் சிறிய அளவில் நிறுவப்பட்டது. மது பிரியர்களின் விருப்பமான மெர்குரி ஒயின் இங்கு தயாரிக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற இந்த திராட்சைத் தோட்டங்களை காலை 11.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    ஒயின் தயாரிக்கும் இந்திய திராட்சைத் தோட்டங்கள்.. ஒரு நாள் விசிட் போங்க.. நல்ல அனுபவம் கிடைக்கும்.!

    குரோவர் (grover) திராட்சைத் தோட்டம் கர்நாடகா மாநிலம் பெனுவுக்கு அருகில் உள்ள நந்தி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. மெச்சூர் ஷிராஸ் ரெட் மற்றும் கேபர்நெட் சாவிக்னான்கள் என்ற நாட்டின் பழமையான ஒயின் ஆலையில் சுமார் 410 ஏக்கரில் ஒயின் உற்பத்தி செய்கின்றனர். வார இறுதியில் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் தாராளமாக இங்கு செல்லலாம். நீங்கள் எப்போதாவது இங்கு சென்றால், Brut, Shiraz, Chenin Blanc, Cabernet Sauvignon, Sauvignon Blanc போன்றவற்றை முயற்சிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 46

    ஒயின் தயாரிக்கும் இந்திய திராட்சைத் தோட்டங்கள்.. ஒரு நாள் விசிட் போங்க.. நல்ல அனுபவம் கிடைக்கும்.!

    புனே அருகே அமைந்துள்ள திராட்சைத் தோட்டத்தில் ஒயின் ஆலைகள் மட்டுமின்றி ஸ்பா, நீச்சல் குளம், பார்ட்டி ஹால் போன்ற இதர வசதிகளுடன் கூடிய அழகான அறைகளும் உள்ளன. இங்கு ஒரு நாள் பயணத்தை திட்டமிட விரும்பினால் ஒரு நபருக்கு ரூ.3500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒயின் தயாரிக்கும் முறைகளையும் இங்கு கற்றுக்கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 56

    ஒயின் தயாரிக்கும் இந்திய திராட்சைத் தோட்டங்கள்.. ஒரு நாள் விசிட் போங்க.. நல்ல அனுபவம் கிடைக்கும்.!

    நாட்டின் மிகப் பழமையான மற்றும் இரண்டாவது பெரிய திராட்சைத் தோட்டங்களில் ஒன்றான சாட்டா இன்டேஜ்(Chata Intej) திராட்சைத் தோட்டம் உள்ளது. புனேவில் இருந்து 85 கிமீ தொலைவில் உள்ள இது ஏறக்குறைய 2000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. மேலும், இங்கு 25 வகையான திராட்சைகளை உற்பத்தி செய்யப்பட்டு அதிலிருந்து பலவகையான ஒயின்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக ஒயிட் ஒயின், ரெட் ஒயின் ஸ்பார்க்லிங் ஒயின் போன்றவை இங்கு கிடைக்கும்

    MORE
    GALLERIES

  • 66

    ஒயின் தயாரிக்கும் இந்திய திராட்சைத் தோட்டங்கள்.. ஒரு நாள் விசிட் போங்க.. நல்ல அனுபவம் கிடைக்கும்.!

    ஓரி(ori) திராட்சை தோட்டம் மத்திய பிரதேசத்தின் திண்டோரி பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. மற்ற திராட்சைத் தோட்டங்களைப் போலவே, இங்கும் பல வகையான ஒயின்கள் தயாரிக்கப்படுகின்றன, சுவாரசிய தகவல் என்னவென்றால் இகு தயாரிக்கப்படும் எல்லா ஒயின்களையும் நீங்கள் சுவைக்க இங்கு வாய்ப்பு கிடைக்கும்.

    MORE
    GALLERIES