20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து காலநிலை மாற்றம் குறித்து கடந்த உலகம் முழுவதும் பேசி வருகிறோம். காலநிலை மாற்றத்தினால் இயற்கை , மரம் செடிகள், விலங்குகள், மனிதர்கள் என அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறோம். அப்படி சில அழகிய இயற்கை தளங்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு வருகின்றன. அவை முழுமையாக அழியும் முன்னர் இந்த இடங்களை எல்லாம் பார்த்துவிட்டு வாருங்கள் மக்களே…
சில மர இனங்களுக்கு அவற்றின் விதைகளை சிதறடிப்பதற்கும் எதிர்கால நாற்றுகளுக்கு நிலத்தை சுத்தம் செய்வதற்கும் காட்டுத் தீ தேவை என்பது உங்களுக்குத் தெரியுமா? கலிஃபோர்னியாவின் ராட்சத சீக்வோயாஸ் அவற்றில் ஒன்று. ஆனால் அதீத காட்டு தீ ஏற்பட்டால் இந்த அமருங்கள் பாதிக்கப்படும். இந்த வானுயரம் வளரும் மரங்கள் பல ஆண்டுகள் நிலைத்து வாழும்.
உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடான இந்தியா மற்றும் வங்காளதேச எல்லையில் விரிந்துள்ள சுந்தரவன காடுகள் கடலோர அரிப்பு, கடலோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் சதுப்புநிலங்களை நிரந்தரமாக அழிப்பது போன்ற அச்சுறுத்தலின் கீழ் உள்ளது. இது புலிகள் மற்றும் பல உள்ளூர் மற்றும் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் தாயகமாகவும் உள்ளது
ஜோர்டான்-இஸ்ரேல் எல்லையில் அமைந்து சாக்கடல், சவக்கடல் என்றெல்லாம் அழைக்கப்படும் டெட் செபட் அதன் உப்புத்தன்மைக்கு பெயர் பெற்றது. இந்த கடலில் உள்ள நீர் வெளியே மற்ற நீரோடு கலக்க வாய்ப்பில்லாததால் அதன் உப்புத்தன்மை அதிகமாக இருக்கும். இதனால் நீச்சல் தெரியாத ஒருவர் கூட இந்த கடலில் எளிதாக மிதக்க முடியும். ஆனால் சமீபகாலமாக இங்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் முற்றிலும் வறண்டு போகும் அபாயம் உள்ளது. வெப்ப அலைகளின் அதிகரிப்பு மற்றும் விவசாய மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக ஜோர்டான் நதியின் திசைதிருப்ப பட்டது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது..